தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
சீமான்... பேசுவது தமிழ்தேசியம்! செய்வது புரோக்கர் வேலையா? - பாகம் 1

சீமான்... பேசுவது தமிழ்தேசியம்! செய்வது புரோக்கர் வேலையா? - பாகம் 1

Radheyan 28 Mar 2023 | 06:12 PM
பகிர்:

கடந்த இருவாரங்களுக்கு முன் மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் வெளியிட்ட "ஸ்டிங் ஆப்ரேசன்" (Sting Operation) வீடியோக்கள் தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இருவரும் கடந்த ஆண்டு இதோபோல் வெளியிட்ட வீடியோவால் பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர் அரசியல் களத்திலிருந்தே அப்புறப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற "ஸ்டிங் ஆப்ரேசன்" வீடியோக்கள் முழுக்க முழுக்க நம்பிக்கைத்துரோகம் என்பதால் நாகரீக சமூகத்தில் இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடுபவர்களை ஆதரிப்பது மானிட சமூகத்திற்கு எதிரானது.

ஆனால் இந்த வீடியோக்களில் சம்மந்தப்பட்டுள்ள நபர்களின் நோக்கங்கள் பொதுவெளியில் அம்பலப்பட்டு, அவர்களின் உண்மை முகத்திரையை கிழித்துள்ளது. இதுவரை தேசம், தமிழ்தேசியம் என்ற பெயரில் நரம்பு புடைக்கப்பேசி இளைஞர்களின் ரத்தத்தை சூடாக்கி கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளது, ஒரு சாண் வயிற்றுக்காக எந்த அளவுக்கு சமூகங்களிடையே பதற்றத்தை உருவாக்கும் நாசகர செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இதில் தமிழ்ச்சமூகத்தை நீண்ட நாள் ஏமாற்றி வரும் நாம் கட்சியின் செபஸ்டியன் சீமான், அவருக்கு ஆதரவாக தெலுங்கர்களை தமிழர்களின் எதிரிகளாக கட்டமைத்து வந்த பேசு தமிழா பேசு யூடியூப் சேனலின் இராஜவேல் நாகராஜன், ஆதவன் யூடியூப் சேனல் மாதேஷ், மூத்த பத்திரிக்கையாளர் ரவீந்திரன் துரைசாமி, சத்தியம் டிவி முக்தார் ஆகியோரின் பேச்சுக்கும், அதன் உண்மையான நோக்கத்தையும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. 

இதில் மற்றவர்களைப்பற்றி நாம் அதிகம் பேச வேண்டிய தேவையில்லை என்றாலும், தெலுங்கர்களுக்கு எதிரான அரசியலை தமிழகத்தில் கட்டமைக்க முயலும் நாம் தமிழர் சீமானின் பித்தலாட்ட அரசியலை மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு அம்பலப்படுத்திக் காட்டுவது தங்கள் இளமையையும், உழைப்பையும் வீணாக்காமல் சரியான அரசியலை தேர்ந்தெடுத்துக்கொள்ள உதவும்.

(தொடரும்)

குறிச்சொற்கள்

கட்டுரைகள் தமிழ்நாடு Seeman thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண