தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி!
விளம்பரங்கள்
தேசிய அளவிலான போட்டியில் எஸ்.எம். ஜஸ்வின் தங்கப்பதக்கம் வென்று சாதனை!

தேசிய அளவிலான போட்டியில் எஸ்.எம். ஜஸ்வின் தங்கப்பதக்கம் வென்று சாதனை!

Admin 28 Jun 2026 | 08:27 PM
பகிர்:

கோவை: சேலத்தில் நடைபெற்ற 14வது ஓபன் நேஷனல் டேக்வாண்டோ (Taekwondo) சாம்பியன்ஷிப்–2026 போட்டியில், கோவையைச் சேர்ந்த இளம் வீரர் எஸ்.எம். ஜஸ்வின் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கோவை மாவட்டம் மாசநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த டி. சிவசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.தி.மு.க.) மதுக்கரை ஒன்றிய அம்மா பேரவைச் செயலாளராக உள்ளார். மேலும், சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள் கிளப் (ரூ.2 லட்சம்) நன்கொடையாளராகவும் உள்ளார்.

அவரது மகன் எஸ். மதிவாணன், கோவையில் "சிகமா என்டர்பிரைசஸ்" என்ற கணினி நிறுவனத்தை நடத்தி வருகிறார். மதிவாணனின் மகனும், டி. சிவசாமியின் பேரனுமான எஸ்.எம். ஜஸ்வின், கோவையில் உள்ள பிருந்தாவனம் வித்யாலயா பப்ளிக் ஸ்கூலில் 6ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

சிறுவயதிலிருந்தே தற்காப்புக் கலைகளில் ஆர்வம் கொண்ட ஜஸ்வின், கராத்தே மற்றும் டேக்வாண்டோ பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

சேலம் காந்தி விளையாட்டு அரங்கில் கடந்த ஜூன் 26 முதல் 28 வரை நடைபெற்ற 14வது ஓபன் நேஷனல் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்–2026 போட்டியில், 25 கிலோ சப்-ஜூனியர் பிரிவில் (U25) பங்கேற்ற ஜஸ்வின் சிறப்பாக விளையாடி முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 13வது ஓபன் நேஷனல் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஜஸ்வின் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். தற்போது அந்த சாதனையை மேம்படுத்தி தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றிருப்பது அவரது விடாமுயற்சிக்கும், தொடர் பயிற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

இந்த வெற்றிக்காக எஸ்.எம். ஜஸ்வினுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ. இராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி. மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து, அவர் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று பாராட்டினர்.

குறிச்சொற்கள்

சாதனையாளர்கள் தமிழ்நாடு s.m.jaswin thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண