தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
இராஜகம்பள சமுதாய நலச்சங்க மண்டலப்பொறுப்பாளர் இல்ல மணவிழா!

இராஜகம்பள சமுதாய நலச்சங்க மண்டலப்பொறுப்பாளர் இல்ல மணவிழா!

Radheyan 21 Feb 2026 | 04:48 AM
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மண்டலப்பொறுப்பாளர் திரு.மு.கணேசன் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (வெள்ளிக்கிழமை, 20.02.2026) நடைபெற்றது. இதில் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதன் விவரம் வருமாறு,

சென்னை, காட்டாங்குளத்தூரிலுள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருபவர் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலூகா,  ஜெயநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மு.கணேசன். வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், மறைமலை நகர் பகுதி மண்டலப்பொறுப்பாளராகவும் இருந்துவருகிறார். திரு.மு.கண்சன் - திருமதி.க. லதா ஆகியோரின் அன்புமகன் க.சுபாஷ் B.E., M.B.A., அன்னணூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.க.இராஜுக்காளை - திருமதி. இரா.ஜெயா ஆகியோரின் அன்புமகள் இரா.ஜூவிதா B.E., ஆகியோரது திருமணம் நேற்று (வெள்ளிக்கிழமை, 20.02.2026) காலை மறைமலைநகர் ஸ்ரீ நாகவள்ளி அம்மன் கோவிலில் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து மறைமலைநகர் வசந்தம் திருமண மண்டபத்தில் மாலை 6.30 மணியளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் இரா.செந்தில்குமார், அமைப்புச்செயலாளர் இரா.சுந்தர்ராஜ், ஆலோசகர்கள் கு.லோகநாதன், வழக்கறிஞர் துரைசாமி, ஒருங்கிணைப்பாளர் த.சுப்பிரமணியன், வேணுகோபால், மண்டலப்பொறுப்பாளர்கள் மாரிச்சாமி, கார்த்தி, பழனிச்சாமி, சின்னமநாயக்கர், வரதராஜ் உள்ளிட்ட  ஏராளனமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண