தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
கலைஞரின் மகளே வருக! த.வீ.க.ப.கழக தலைவர் நேரடி அழைப்பு!

கலைஞரின் மகளே வருக! த.வீ.க.ப.கழக தலைவர் நேரடி அழைப்பு!

Radheyan 24 Sep 2021 | 11:36 PM
பகிர்:

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக,  மாவட்ட தலைவர் தொழிலதிபர். வலசை கண்ணன் அவர்கள் தலைமையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி கருணாநிதி அவர்களை சந்தித்து மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தலைநகரில் சிலை, தளி எத்திலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் உள்ளிட்ட நான்கு அறிவிப்புகளை தமிழக சட்டமன்றத்தில் வெளியிட்டமைக்காக  தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

மேலும் பாஞ்சாலங்குறிச்சியின் வளர்ச்சிக்கு தேவையான முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், அக்டோபர்'16 அன்று கயத்தாறு நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வருகை தந்து கட்டபொம்மன் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு விடுத்தனர். நிச்சயமாக வருகிறேன் என்று டாக்டர் கலைஞரின் மகள் வாக்குறுதி கொடுத்துள்ளார். 

தவிர, த.வீ.பா.கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக வைக்கப்பட்டுள்ள  கோரிக்கையையும் விரைவில் நிறைவேற்றி தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்.

இந்திகழ்வின்போது கொ.ப.செ. வெண்கல குரலோன் ராமலிங்கம், மல்லுசாமி, பாஞ்சை கோபால்சாமி, சங்கர், சிவா, ஜெயராமன், போன்ற எண்ணற்ற சமுதாய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் உதவி.
பாஞ்சை போர்முழக்கம்.பெ.செந்தில்குமார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Kannan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண