தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
நகர்ப்புற உள்ளாட்சியில் வெற்றிக்கனியை பறித்த கம்பளத்தார்கள்!

நகர்ப்புற உள்ளாட்சியில் வெற்றிக்கனியை பறித்த கம்பளத்தார்கள்!

Radheyan 24 Feb 2022 | 11:59 PM
பகிர்:

கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்பணி கடந்த 22-ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெற்று அன்றே அனைத்து முடிவுகளும் வெளியாயின. இதில் ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக்கழக கூட்டணிக்கட்சிகள் 90  விழுக்காடு இடங்களுக்கு மேலாக வெற்றிபெற்று வரலாற்றுச்சாதனை படைத்தது.

இத்தேர்தலில் தமிழகம் முழுவதும் கம்பளத்தார்கள் ஆங்காங்கே பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்டனர். இவர்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சிக்குறிய செய்தி.


ஈரோடு மாவட்டம், அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட திருமதி.பிரியா தேவமுத்து, பெரிய கொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திரு.K.P.முத்து, மற்றொரு வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட திருமதி.சுமதி வேலுச்சாமி ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட அல்லம்பட்டி வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட திரு.சரவணன், கோட்டைபட்டி வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருமதி.கந்தசாமி ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Election Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண