தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
எங்கெங்கு காணினும் மாநாட்டு சுவர் விளம்பரங்கள்!

எங்கெங்கு காணினும் மாநாட்டு சுவர் விளம்பரங்கள்!

Radheyan 22 Jun 2022 | 11:49 PM
பகிர்:

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட, 146 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் சார்பில் மதுரை விமான நிலையம் அருகே ஆகஸ்டு'07-ஆம் தேதி நடைபெறவுள்ள சமூகநீதி மாநாட்டிற்காக சுவர் விளம்பரங்களும், மாநாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் பிரச்சார கூட்டங்கள் தமிழகம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முதலில் மதுரை சுற்று வட்டாரங்களில் தொடங்கிய சுவர் விளம்பரம் செய்யும் பணிகள் தற்பொழுது மெல்ல மெல்ல சூடுபிடித்து மற்ற மாவட்டங்களிலும் செய்யப்பட்டு வருகிறது.


ஒவ்வொரு சமூகங்களும் அவரவர் அதிகமுள்ள கிராம, நகரங்களில் விளம்பரம் செய்து வருவதால் தென் மாவட்டங்களிலும், மத்திய மாவட்டங்களிலும் மாநாடு குறித்த செய்திகளை சுவர் விளம்பரங்களால் களைகட்டி வருகிறது.


தொட்டியநாயக்கர் சமுதாயத்தின் சார்பில் நாமக்கல்,  கரூர் மாவட்டங்களில் விளம்பரப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  கோவை, ஈரோடு மாவட்டங்களிலும் மாநாட்டிற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.



குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு DNT Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண