தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
நாட்டின் முதல்குடிமகளாக மண்ணின் ஆதிகுடி!- கம்பளத்தாரின் வாழ்த்துகள்!

நாட்டின் முதல்குடிமகளாக மண்ணின் ஆதிகுடி!- கம்பளத்தாரின் வாழ்த்துகள்!

Radheyan 25 Jul 2022 | 04:14 PM
பகிர்:

நாட்டின் முதல்குடிமகளாக மண்ணின் ஆதிகுடி!- கம்பளத்தாரின் வாழ்த்துகள்!

இன்று காலை 10.15 மணியளவில் நடைபெற்ற விழாவில் சுதந்திர இந்தியாவின் 15-வது குடியரசுத்தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார். முன்னதாக காலை குடியரசுத்தலைவ மாளிகையில் விடைபெற்றுச்செல்லும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந் அளித்த விருந்தில் கலந்துகொண்டுவிட்டு, அங்கிருந்து இருவரும் ஒன்றாக பதவியேற்கும் இடத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டு முர்மு ஆற்றிய உரையில்,  முதல் பழங்குடியினப்பெண்ணாக நாட்டின் குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனக்கு வாக்களித்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்கு பணியாற்றப்போவதாகவும் தெரிவித்தார்.

பதவியேற்பு விழாவில் ஓய்வு பெறும் குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் கவர்னர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மண்ணின் ஆதிகுடியான பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த மேதகு.திரௌபதி முர்மு அவர்களின் குடியரசுத்தலைவர் பணி சிறக்க இராஜகம்பள சமுதாய மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Droupadhi Murmu thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண