தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
கோவையா.... கொக்கா! நேரமிருந்தா கொஞ்சம் வந்துபாருங்க....

கோவையா.... கொக்கா! நேரமிருந்தா கொஞ்சம் வந்துபாருங்க....

Radheyan 31 Jul 2022 | 12:58 AM
பகிர்:

தென்னிந்தியாவின் மான்செஸ்டர், சிறுவாணி தண்ணீருக்கும், கொங்கு தமிழுக்கும் பெயர்பெற்ற கோவையில் கம்பளி தேசத்திலிருந்து வந்து தமிழ் மண்ணில் புகழ்கொடி நாட்டிய நம் முன்னோர்கள் நல்லாசியோடு நாளை இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் தொடங்கப்படவுள்ளது. காலை 10 மணியளவில் கோவை, ஈச்சனாரியிலுள்ள விவேகா திருமண மண்டபத்தில் மாச்சேகவுண்டன்பாளையம் D.சிவசாமி அவர்களின் தலைமையில் நடக்கவிருக்கும் விழாவிற்கு, கோவை மாவட்ட ஊர் நாயக்கர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரின் படத்திறப்பும், அதனையடுத்து கிராமம் தோறும் அமைக்கப்பட்டுள்ள கிளைக்கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் அறிமுகமும் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமுதாய தலைவர்களும், இளைஞரணி நிர்வாகிகளும் பிரமாண்ட முறையில் செய்து வருகின்றனர்.  துவக்கவிழாவில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் கோவை மாவட்ட கம்பளத்தார் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Kovai thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண