தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
சங்கத்தின் முயற்சி! உள்ளாட்சி தலைவர்கள் மகிழ்ச்சி!

சங்கத்தின் முயற்சி! உள்ளாட்சி தலைவர்கள் மகிழ்ச்சி!

Radheyan 22 Nov 2022 | 04:38 PM
பகிர்:

2023- ஜனவரி 29-இல் நடைபெறவுள்ள முப்பெரும் விழா விளக்கக்கூட்டம் நேற்று (21.11 2022) காலை இராசிபுரத்தில் உள்ள ஓய்வு பெற்ற பிடிஓ நாகப்பன் இல்லத்தில் நடைபெற்றது. 

இராசிபுரம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு புதுச்சத்திரம் ஒன்றிய துணைத்தலைவர் ராம்குமார் முன்னிலை வகித்தார். 

முப்பெரும்விழா குறித்த விளக்கம், நோக்கம் குறித்து வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் விளக்கிப்பேசினார். 

இக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய துணைச்செயலாளர் சிவக்குமார் அவர்கள், முதல்முறையாக சமுதாய அமைப்பு சார்பில் அரசியல் இயக்கங்களைச் சார்ந்த எங்களை அழைத்து ஆலோசிப்பதற்கும், சமுதாயத்தைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் உரிய அதிகாரப் பதவிகளைப் பெற, மாநில அளவில் தலைநகரில் பிரதான இடத்தில் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ள இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் முயற்சி மிகவும் பாரட்டப்பட வேண்டிய செயல் என்று கூறினார். இக்கருத்தை கூட்டத்தில் கலந்துகொண்ட உள்ளாட்சி தலைவர்கள் ஆமோதித்தனர்.

இராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு, இந்த விழாவை வெற்றிகரமாக நடத்திட தாங்களே முன்னின்று பணியாற்றுவதாகவும்,  அனைவரையும் ஒன்று சேர்த்து கூட்டத்திற்கு அழைத்து வருவதாகவும் உறுதியளித்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண