தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
திருப்பதி மாநகர மேயருடன் இராஜகம்பளத்தார் சந்திப்பு!

திருப்பதி மாநகர மேயருடன் இராஜகம்பளத்தார் சந்திப்பு!

Radheyan 14 Mar 2023 | 01:17 AM
பகிர்:

ஆந்திர மாநிலம் திருப்பதி மாநகர மேயருடன் சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்துப்பேசியுள்ளனர். இதுகுறித்து சமுதாய நலச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்ற திருப்பதி மாநகர மேயரும் குழந்தைகள் நல மருத்துவருமான திருமதி.ஸ்ரீஷா அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டு, முப்பெரும்விழாவிற்கு வருகைதர ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் எதிர்பாரத விதமாக மாநில அரசு சார்பில் அன்றைய தினம் மேயர்களுக்கான முகாம் நடத்தப்பட்டதால் முப்பெரும்விழா நிகழ்வில் திருப்பதி மாநகர மேயரால் கலந்துகொள்ள முடியாமல் போனது.


இதனையடுத்து முப்பெரும்விழாவிற்கான வாழ்த்துச்செய்தி மேயர் சார்பில் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. இதற்கிடையே தற்போது இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நிர்வாகிகள் திருப்பதி மாநகர மேயரை சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது நிர்வாகிகளிடம் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துப்பேசிய மேயர் அவர்கள், வரும்காலங்களில் நிச்சயம் கலந்துகொள்வதாகவும், நிகழ்ச்சி குறித்து ஒருசில மாதங்களுக்கு முன்பே தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து திருப்பதி மாநகர மேயருக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.


இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையில் சென்ற இக்குழுவில் துணைத்தலைவர் பெருமாள் மற்றும் மாப்பிள்ளை துரை ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Dr.Sireesha thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண