தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• எம்ஜிஆரைப் பின்தொடர்கிறாரா விஜய்? – உலக அரசியல் வரலாறும் விஜயின் அரசியல் பயணமும் | பகுதி – 1 • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • எம்ஜிஆரைப் பின்தொடர்கிறாரா விஜய்? – உலக அரசியல் வரலாறும் விஜயின் அரசியல் பயணமும் | பகுதி – 1 • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு!
விளம்பரங்கள்
அறிவை ஊக்குவிக்கும் கரங்கள்: IIT மாணவர் கவின் பிரசாந்துக்கு சமுதாய நலச்சங்கம் நிதியுதவி!

அறிவை ஊக்குவிக்கும் கரங்கள்: IIT மாணவர் கவின் பிரசாந்துக்கு சமுதாய நலச்சங்கம் நிதியுதவி!

Radheyan 16 Mar 2023 | 04:51 PM
பகிர்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள மில்மேடு–காளிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர். கவின் பிரசாந்த். வணிகவியல் (B.Com.) பட்டம் பெற்ற விவசாயத் தம்பதிகளான ஆர். இரவி – ஆர். இராஜேஸ்வரி ஆகியோரின் மூத்த மகனான இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற JEE நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras)-இல் இயந்திரவியல் (Mechanical Engineering) துறையில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 233 மாணவர்கள் இவருடன் இணைந்து பயிலும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற முதல் பருவத் தேர்வில் 10-க்கு 9 GPA பெற்று, தனது வகுப்பில் மூன்றாம் இடத்தை பிடித்து மேலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.

21-ஆம் நூற்றாண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் காலமாக மாறிவரும் நிலையில், சமுதாயத்தின் இளம் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் கவின் பிரசாந்துக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என். பவுல்ராஜ் வைத்திருந்த கோரிக்கையை பரிசீலித்த சங்க நிர்வாகம், கல்வி உதவித்தொகைக்கான வழக்கமான விதிமுறைகளில் இருந்து சிறப்பு விலக்கு அளித்து, கவின் பிரசாந்தின் கல்விச் சாதனையைப் பாராட்டும் வகையில் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்க ஒப்புதல் அளித்தது.

அதன்படி, இன்று காலை செண்பகப்புதூர் பகுதியில், பட்டக்காரர் சதீஸ்குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு உறுப்பினர் வி.என். சின்னச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் என். பவுல்ராஜ் ஆகியோர், கவின் பிரசாந்தின் தந்தை ஆர். இரவி அவர்களிடம் சங்கத்தின் சார்பில் ரூ.10,000 மதிப்பிலான காசோலையை வழங்கினர்.

இந்த நிகழ்வில் தொழிலதிபர்கள் தங்கராஜ், மோகன், திமுக இளைஞரணி அமைப்பாளர் விஜயகுமார், காங்கிரஸ் கட்சி பிரமுகர் வினோத் மற்றும் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காசோலையை பெற்றுக்கொண்ட கவின் பிரசாந்தின் தந்தை ஆர். இரவி, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்கும், நிதி திரட்டும் பணியில் தீவிரமாக செயல்பட்ட பவுல்ராஜ், தங்கராஜ், மோகன் ஆகியோருக்கும், முப்பெரும் விழாவிற்கு நிதியுதவி வழங்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

மருத்துவ மாணவருக்கும் ரூ.10,000 உதவித்தொகை!

இதனைத் தொடர்ந்து, கடந்த 11.03.2023 அன்று மாலை நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயிலும் ப. கிரிசங்கர் என்ற மாணவருக்கும் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், குன்னமலை அஞ்சல், சிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி அவர்களின் மகனான கிரிசங்கருக்கு மருத்துவப் பாடப்புத்தகங்கள் வாங்கும் நோக்கில் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் மு. பழனிச்சாமி, தலைமையிடச் செயலாளர் மணி (VAO ஓய்வு), அறக்கட்டளை உறுப்பினர்கள் சாமிநகர் தங்கவேல், தூ. பாலப்பட்டி சின்னசாமி, வேலூர் ரங்கராஜ் மற்றும் மாணவரின் தந்தை பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு kavin prasanth thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண