தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
குரூப் சர்வீஸ் பயிற்சி மையத்தில் நிர்வாகிகள் ஆய்வு!

குரூப் சர்வீஸ் பயிற்சி மையத்தில் நிர்வாகிகள் ஆய்வு!

Radheyan 18 Mar 2023 | 11:50 PM
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் நிதியுதவியோடு, கட்டபொம்மன் அகாடமி மற்றும் மேத்தா ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தும் குரூப் சர்வீஸ் தேர்வில், கம்பளத்தார் சமுதாய மாணவ-மாணவியர்கள் பதினோரு பேருக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இருவாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த பயிற்சி வகுப்பில் நேரடி வகுப்பிலும், ஆன்லைன் வகுப்பிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.


இந்நிலையில், கடந்த இருவாரகால பயிற்சி வகுப்பின் நிறை குறைகளையும், மாணவர்களின் தேவைகளையும் பயிற்சி மைய நிர்வாகத்தோடு கலந்தாலோசிக்கவும், மாணவ-மாணவியரின் ஆர்வம், ஒத்துழைப்பு குறித்து தெரிந்துகொள்ளவும் சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் இன்று பயிற்சி வகுப்பில் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் தேர்வுக்குழு சார்பில் மத்திய பொதுப்பணித்துறை ஒய்வு பெற்ற இயக்குநர் பெ.இராமராஜ், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜ் மற்றும் மூத்த நிர்வாகிகள் செல்வராஜ், குருசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு kattabomman acadamy thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண