தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
கம்பளத்தார் விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

கம்பளத்தார் விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

Radheyan 03 Jul 2023 | 01:18 AM
பகிர்:

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் எலவனூர் கிராமத்தில், ஸ்ரீ வீரகொண்டவ நாயக்கர் சுவாமி, ஸ்ரீ மாட்டுக்கார சுவாமி, ஸ்ரீ வீரபொம்மக்காள் சுவாமி, ஸ்ரீ வீர ஜக்கம்மாள் சுவாமி, ஸ்ரீ வீர சின்னக்காள் சுவாமி எழுந்தருளியுள்ள திருக்கோவில் பெரிய மாலை திருவிழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் கலந்துகொண்டார். 


இதுகுறித்து சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை அவர்கள், இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை, இறை உத்தரவுக்குப் பிறகு நடந்தேறும் இந்த பெரிய மாலைத் திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியமெனக் கருதுகிறேன். அனைவரும், நல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டிக் கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கம்பளத்தாரின் பிரத்யோக விழா ஒன்றில் தேசியக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றதில் கம்பளத்தாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, முன்னதாக விழாவில் கலந்துகொள்ள வருகைதந்த அண்ணாமலைக்கு சமுதாய தலைவர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு BJP Annamalai thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண