தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
நாட்டிய மங்கை செல்வி.ஹர்ஷிதா சாய்-இன் சலங்கை பூஜை கோலாகலம்!

நாட்டிய மங்கை செல்வி.ஹர்ஷிதா சாய்-இன் சலங்கை பூஜை கோலாகலம்!

Radheyan 17 Sep 2023 | 01:18 AM
பகிர்:

சென்னை அருகேயுள்ள பேரூரில் வசித்து வருபவர்கள் தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்ட திரு.செல்வக்குமார் - திருமதி.பால தனலட்சுமி தம்பதியினர். திரு.செல்வக்குமார் அவர்கள் எல்&டி நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக உள்ளார். இவர்களின் அன்புமகள் எஸ்.பி.ஹர்ஷிதா சாய்  புகழ்பெற்ற தி ஸ்ராம் அகாடமியில் 7-வது படித்து வருகிறார். ஹர்ஷிதாசாய் கடந்த ஐந்தாண்டுகளாக போரூரிலுள்ள ஸ்ரீ ஹயக்கிரீவர் ஆர்ட்ஸ் & கல்ச்சுரல்  நாட்டியப்பள்ளியில் ஆசிரியர் திருமதி.ஆர்.எஸ்.அபிநய ஸ்ரீ அவர்களிடம் பரதநாட்டியம் பயின்றுவருகிறார். செல்வி.எஸ்.பி.ஹர்ஷிதா சாய் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும்விழா தொடக்க நிகழ்வில் பரதநாட்டியம் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், செல்வி.ஹர்ஷிதா சாயின் சலங்கை பூஜை நிகழ்வு சென்னை அண்ணாசாலையிலுள்ள புகழ்பெற்ற ராணிசீதை அரங்கில் நேற்று (15.09.2023) மாலை நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக திரைப்பட நடிகை கலைமாமணி திருமதி.நளினி பங்கேற்று மாணவிகளை வாழ்த்தினார். மேலும் இந்த நிகழ்வில் சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், மண்டல பொறுப்பாளர் ஆறுமுகசாமி, ஜெயகிருஷ்ணன், மாப்பிள்ளை துரை, கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு செல்வி.ஹர்ஷிதா சாய்-க்கு பரிசு வழங்கி வாழ்த்தினர்.  


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Harshithasai thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண