தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
கட்டபொம்மனாரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வருமாறு அமைச்சருக்கு நேரில் அழைப்பு!

கட்டபொம்மனாரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வருமாறு அமைச்சருக்கு நேரில் அழைப்பு!

Radheyan 27 Dec 2023 | 06:25 PM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாள் 2024-ஜனவரி 3 ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது. பிறந்தநாள் விழாவை எழுச்சியோடும், சிறப்போடும் நடத்திட தமிழகம் முழுவதும் சிறப்பான ஏற்பாடுகளை பல்வேறு அமைப்புகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் எதிரே மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளைக் கொண்டாட ஈரோடு மாவட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்துவருகிறது. ஆண்டுதோறும் மிகுந்த எழுச்சியோடு பிறந்த நாளை நடத்தும் நிர்வாகிகள் பல்வேறு கட்சித்தலைவர்களையும், அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சிறப்பு விருந்தினராக அழைப்பது வழக்கம். இதில் செங்கோட்டையன், பெரியகருப்பன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் கடந்த காலங்களில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர்.

அதேபோல் இந்த ஆண்டு நடைபெறும் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வருமாறு திமுகவின் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளரும்,  தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமி மற்றும் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் N.நல்லசிவம் ஆகியோரை தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Kattabomman thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண