தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
வாசுதேவநல்லூர் வீரசக்கதேவி கோவில் பசு ஓட்ட திருவிழா!

வாசுதேவநல்லூர் வீரசக்கதேவி கோவில் பசு ஓட்ட திருவிழா!

Radheyan 14 Jul 2024 | 05:53 PM
பகிர்:

வாசுதேவநல்லூரில் இராஜகம்பள தொட்டிய நாயக்கர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு வீரசக்கதேவி பொம்மாத்தாள் திருக்கோயிலில் முத்தாலம்மன் அனுப்பு விழா மற்றும் பசு ஓட்டத் திருவிழா கடந்த 11 ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. வாசுதேவநல்லூர் அருளாட்சி மருதமீனாட்சியாபுரம் சுப்பிரமணியபுரம், வெள்ளாணைகோட்டை ஆகிய ஊர்களின் நாட்டாண்மை குதிரையில் அமர்ந்து ஊர்வலமாக பரிவாரங்களுடன் மேள தாளங்கள் முழங்க வருகை தந்து கோவில் எல்லையில் வாசுதேவநல்லூர் நாட்டாண்மை நவநீதகிருஷ்ணன் மாலை சால்வை அணிவித்து மரியாதை செய்தார். 


மேலும்,பல்வேறு ஊர்களில் இருந்து வந்த ராஜகம்பள நாயக்கர் சமுதாய நாட்டாண்மை மற்றும் அனைத்து சமுதாய நாட்டாண்மைகளுக்கும் சிறப்பான மரியாதை செய்து தேவதந்துமி மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொழிலதிபர் தங்கப் பழம்,  சுமங்கலி சமுத்திரவேல், தவமணி, திமுக நகரச் செயலாளர் ரூபி பாலசுப்ரமணியன், காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வராஜ், சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ராம்குமார், சிவானந்தம், முன்னாள் கவுன்சிலர் கோட்டியப்பன், கட்டபொம்மன் தங்கமுனியான்டி, முருகன், பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 பசு ஓட்ட நிகழ்ச்சியை காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினரும். கட்டபொம்மன் அறக்கட்டளை தலைவர் நாகராஜன் துவக்கி வைத்தார். பசு ஓட்ட நிகழ்ச்சி முடித்தவுடன் முத்தாலம்மன் அனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு பத்து மணியளவில் வாசுதேவநல்லூர் நாட்டாண்மை நவநீதகிருஷ்ணன் அலங்கரிக்கப்பட்ட குதிரையில் பவனி ஊர்வலமாக கட்டபொம்மன் தெருவில் உள்ள வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். இறுதியாக அனைத்து ஊர் நாட்டாண்மைகளுக்கும், சமுதாய பொதுமக்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Vasudevanallur thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண