தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மதுக்கடல் விண்வெளியில் கண்டுபிடிப்பு!

பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மதுக்கடல் விண்வெளியில் கண்டுபிடிப்பு!

Radheyan 11 Sep 2024 | 04:27 PM
பகிர்:

பிரபஞ்சத்தின் மிகப்பெரும் மதுக்கடல் சாஜிட்டாரியஸ் பி நட்சத்திரம் அருகே கண்டுபிடிக்கபட்டுள்ளது. அதை விஞ்ஞானிகள் "ராஸ்பெர்ரி ரம் கடல்" என அழைக்கிறார்கள்.

1970க்களில் ரேடியோ டெலெஸ்கோப்பை வைத்து சாஜிட்டெரியஸ் நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள்.

அப்போது வந்த ரேடியோ அலைகளை வைத்து ஆராய்கையில், சாஜிட்டெரியஸ் நட்சத்திரம் அருகே மிகப்பெரும் மேககூட்டம் ஒன்று (Sagittarius-B Cloud) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் நிறை சூரியனை விட 30 லட்சம் மடங்கு பெரியது. இதன் நீளம் மட்டும் 390 ஒளியாண்டுகள்.

சூரியனை விட 1 கோடி மடங்கு அதிக பிரகாசம் தரும் வெளிச்சத்தை தருகிறது இம்மேகம். இந்த மேகம் முழுக்க பல்வேறு வகை நீராவிகள், வாயுக்கள், திரவங்கள் உள்ளன. இதிலிருந்தே பல நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. விண்வெளியில் கொடும் குளிர் இருப்பதாலும், இதனுள்ளேயே நட்சத்திரங்கள் இருப்பதால் வெப்பம் இருப்பதாலும், வாயு, நீர், பனி என பல்வேறு வடிவங்களில் இதனுள் திரவங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது ஆல்கஹால்.

குறிப்பாக எத்தனால், மெதனால் மற்றும் வினைல் ஆல்கஹால் ஆகியவை மிகப்பெரும் அளவில் இந்த மேகத்தில் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது. பூமியில் உள்ள கடல்களை எல்லாம் சேர்த்தாலும், நிகராகாது எனும் அளவுக்கு மது விண்வெளியில் கடலாக மிதந்துகொண்டுள்ளது.

அதிலும் ஏராளமாக எஸ்டெர் (Ester) எனும் கெமிக்கலும் (Compound) கண்டுபிடிக்கபட்டுள்ளது. எஸ்டெரால் தான் ராஸ்ப்பெர்ரி பழங்களுக்கு அந்த நிறமும், வாசமும் வருவதால், இக்கடலை "ராஸ்பெர்ரி ரம் கடல்" என விஞ்ஞானிகள் செல்லமாக அழைக்கிறார்கள்.

அத்தனை அமினோ அமிலங்களுக்கான மூலப்பொருள், வாயுக்கள், நீர் எல்லாம் உள்ளது. இதில் உள்ள நீர், நீராவி எல்லாம் பூமியில் உள்ள் சமுத்திரங்களை விட பலகோடி மடங்கு பெரியது. திரவவடிவில், நீர், பனி எல்லாம் உள்ளது. அமினோ அமிலங்களும் உள்ளது. உயிர் உருவாககூடிய அளவுக்கு 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் இதில் உள்ளதாக தெரிகிறது. உள்ளேயே சூட்டுக்கு நட்சத்திரங்களும் இருப்பதால் இருப்பதால் திரவங்கள் ஆவி, குளிரால் பனி, திரவவடிவம் என பல்வேறு வடிவங்களை எட்டுகின்றன.

பாறை கிரகங்களில் மட்டுமே தான் உயிர்கள் உருவாகவேண்டுமா என்ன? மிதக்கும் மேகங்களிலும் உருவாகலாம். அங்கே இருக்கும் மிதக்கும் சமுத்திரங்களில் இதமான தட்பவெப்பத்தில், அமினோ அமிலங்கள் கூடி, கடல்வாழ் உயிரினங்கள் ஏன் உருவாகி இருக்ககூடாது?

நன்றி: நியாண்டர் செல்வன்

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண