தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
ஒன்றியப் பொதுச்செயலாளராக அருண்குமார் நியமனம்!

ஒன்றியப் பொதுச்செயலாளராக அருண்குமார் நியமனம்!

Radheyan 11 Jun 2025 | 04:06 PM
பகிர்:

பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் கிழக்கு மாவட்டம் காரியாபட்டி மேற்கு ஒன்றியப் பொதுச் செயலாளராக வி.அருண்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சமுதாயத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் பின்வருமாறு,

விருதுநகர் மாவட்டம், பாலவநத்தம் அருகேயுள்ள நாகம்பட்டியைச் சேர்ந்தவர் வி.அருண்குமார். இவர் கடந்த 2021-சட்டமன்றத் தேர்தலில் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் சுயோட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்று கவனத்தை ஈர்த்தவர். 

நிதி நிறுவனம், துரித உணவகம் மற்றும் கோல்டன் பாய்ஸ் என்ற பெயரில் கலைக்குழு நடத்தி வரும் அருண்குமார், பாஜக-வில் தகவல் தொழில்நுட்ப அணியின் ஒன்றிய துணைச் செயலாளராகவும், சக்தி கேந்திர பொறுப்பாளராகவும் இருந்தவர். 

தமிழக பாஜகவில் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பில் விருதுநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட காரியாபட்டி மேற்கு ஒன்றியப் பொதுச்செயலாளராக வி.அருண்குமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் ஜி.பாண்டுரங்கன் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலோடு கடந்த 07.06.2025 வெளியிட்டுள்ள பட்டியலின்படி காரியாபட்டி மேற்கு ஒன்றியப் பொதுச்செயலாளராக வி.அருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒன்றியப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அருண்குமார் அவர்களின் பணிசிறக்க சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு arunkumar thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண