தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தின் முதல்வராக திரு.இராமசாமி நியமனம்!

தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தின் முதல்வராக திரு.இராமசாமி நியமனம்!

Radheyan 16 Sep 2025 | 01:44 AM
பகிர்:
கோவை கண்ணம்பாளையத்திலுள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தின் முதல்வராக சிவகாசியைச் சேர்ந்த திரு.கே.இராமசாமி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சமுதாயத் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு,

கோவை கண்ணம்பாளையத்தில் இயங்கிவருவது கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்கல்வி நிறுவனம். 2008 முதல் இயங்கிவரும் இப்பொறியியல் கல்லூரி அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி பெற்ற ஓரு நிறுவனமாகும். இக்கல்லூரியில் இயந்திரவியல் துறையின் டீனாக சிவகாசியைப் பூர்வீகமாகக் கொண்ட திரு.கே.இராமசாமி பணியாற்றி வருகிறார். வெளிநாடுகளில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவமும், முனைவர் பட்டமும் பெற்றுள்ள திரு.கே.இராமசாமி,  தாய்நாடு திரும்பியவுடன் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராக இணைந்துகொண்டார். கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்கல்லூரியில் துறைத்தலைவராகவும், ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றி வந்த திரு.இராமசாமி அவர்களை முதல்வராகப் பதவி உயர்வு வழங்கி அக்கல்லூரி நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் அந்நிறுவனத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

திரு.இராமசாமி அவர்கள் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களும், கல்வியாளர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Principal Ramasamy thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண