தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
அதிமுக மாவட்டத் துணைச் செயலாளராக வழக்கறிஞர் பார்த்தசாரதி நியமனம்!

அதிமுக மாவட்டத் துணைச் செயலாளராக வழக்கறிஞர் பார்த்தசாரதி நியமனம்!

Radheyan 04 Feb 2026 | 11:47 PM
பகிர்:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர்  எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஒப்புதலின்படி அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழ்  புதிய நிர்வாகிகள் பட்டியலை நேற்று (03.02.2026) வெளியிட்டுள்ளது. அதன்படி திருவள்ளுவர் மாவட்ட துணைச்செயலாளராக வழக்கறிஞர் எம்.பார்த்தசாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் விவரம் வருமாறு,

திண்டுக்கல் மாவட்டம், மாங்கரை கிராமத்தில் திரு.முத்துச்சாமி - திருமதிலட்சுமி அம்மாள் ஆகிய  விவசாயத் தம்பதிகளின் மகனாகப் பிறந்த  சேர்ந்தவர் வழக்கறிஞர் எம்.பார்த்தசாரதி. சட்டத்துறையில் முதுகலை  (M.A.,M.L.,) பட்டம், காந்திய சிந்தனையில் பட்டயம் (DGT)  பெற்றுள்ள திரு. பார்த்தசாரதி, சென்னை உயர்நீதிமன்ற பிரபல மூத்த வழக்கறிஞரிடம் ஜூனியராகப் சட்டப்பணியைத் தொடங்கினார்.

இவரது மூத்த வழக்கறிஞர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டபின் தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடி வந்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சட்ட அலோசகர்களில் ஒருவரான பார்த்தசாரதி, திருவள்ளூர் நகராட்சி வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னை அருகேயுள்ள திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அதிமுக திருவள்ளூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளராக எம்.பார்த்தசாரதி M.A.,M.L., அவர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இச்செய்தி அக்கட்சியின் நமது அம்மா நாளிதழில் வெளியாகியுள்ளது. இவரது உடன்பிறந்த சகோதரரும், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கதின் மண்டலப்பொறுப்பாளர்களில் ஒருவருமான திரு.எம்டிஎஸ் பாண்டியன் சமீபத்தில் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி துணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், அமைப்புச்செயலாளர் ஆர்.சுந்தர்ராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் வழக்கறிஞர் பார்த்தசாரதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Adv.Parthasarathy thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண