தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
கேரள மாநில உள்ளாட்சித்தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டிய இராஜகம்பளத்தார்!

கேரள மாநில உள்ளாட்சித்தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டிய இராஜகம்பளத்தார்!

Admin 16 Dec 2020 | 11:33 PM
பகிர்:

கேரள மாநிலத்தில் மூன்றுகட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 10-ஆம்தேதி நடைபெற்றது. இதில் நமது இராஜகம்பள சமுதாயத்தைச்சேர்ந்த திரு.நிமேஷ் அவர்கள் மலம்புழா பஞ்சாயத்திற்குட்பட்ட  5-ஆவது வார்டிலும், திரு கண்ணன் அவர்கள் புதுச்சேரி  பஞ்சாயத்திற்குட்பட்ட 2-வது வார்டிலும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக களமிறங்கினர். நேற்று முன்தினம் மூன்று கட்ட வாக்குப்பதிவுகளும் முடிவுற்ற நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியபோதிலும், பாலக்காடு மாவட்டம், மலம்புழா பஞ்சாயத்து 5-வார்டு உறுப்பினர் தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட்ட நமது இராஜகம்பளத்து சமுதாய வேட்பாளர் திரு.நிமேஷ் அவர்கள் தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட வேட்பாளரைவிட நூற்றுக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றிபெற்றார். மற்றொரு வேட்பாளர் திரு.கண்ணன் அவர்கள் 64 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார். உள்ளாட்சித்தேர்தலில் வெற்றிபெற்ற திரு.நிமேஷ் அவர்களுக்கு தமிழ்நாட்டில் வாழும் இராஜகம்பளத்து சமுதாய மகக்ளின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr. Nimesh Thottianaicker thottianaicker
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண