தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் - மெய்ஞானமும் - பகுதி51

பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் - மெய்ஞானமும் - பகுதி51

Radheyan 01 Nov 2023 | 01:00 AM
பகிர்:

விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி -51

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

கடந்த 51 வாரங்களாக விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதியில் நாம் நிறைய விடயங்கள் பற்றி சிந்தித்து கொண்டு வந்தோம். இதில் விஞ்ஞானத்தில் இருக்கும் ஆரம்ப ஆராய்ச்சி முதல் இன்றைய நவீன ஆராய்ச்சி அதாவது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) வரை பார்த்து வந்துள்ளோம். மெய்ஞானத்தில் பல்வேறு விடயங்கள் பற்றி அதாவது புத்தி, அறிவு, மனம் மற்றும் ஆன்மா பற்றி அறிந்து கொண்டோம். 

விஞ்ஞானம் என்பது ஒரு குறிப்பிட்ட வரையறையை  அல்லது கோட்பாட்டைக் கொண்டு அதை நிரூபணம் செய்து அதை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல். மெய்ஞானம் என்பது வரையறை அற்ற பிரபஞ்சத்தில் ஒவ்வொரு தனிமனித முயற்சி மூலமும் அல்லது ஒவ்வொரு தனிமனித உள்ளுணர்வு மூலமாக தன்னை அறிந்து பின்னர் இந்த பிரபஞ்ச விதிகளை கண்டு பிறர்க்கும் பயன்படும் விதத்தில் அதை வெளி உலகிற்கு உணர்த்துதல். இதுவரை விஞ்ஞானம் தொடமுடியாத அல்லது கண்டு பிடிக்க முடியாது பல அறிய விசயங்கள் ‌நமது மெஞ்ஞானிகளால் கண்டுணர்ந்து உலகிற்கு உணர்த்தப்பட்டுள்ளது. இரு்பினும்  விஞ்ஞானம் மற்றும் மெஞ்ஞானம் என்பது ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. 

இவை இரண்டுமே இணையாத தண்டவாளங்கள் போன்றே இணைந்தே சென்று கொண்டு உள்ளது. இவை இரண்டும் இணையும் தருணம் ஒரு அற்புதமான தருணமாக இருக்கும் என்பது எனது மற்றும் கோடானுகோடி மெஞ்ஞானிகளின் அவா.. அதாவது விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒரே விடயத்தை இரண்டு பாதையில் பயணித்து உண்மையை  உணர்ந்து சொல்லும் வேலை மிகவும் நெருங்கி வருகிறது எனவே கூறலாம். அந்த தருணம் வெகு அருகில் இருப்பதாகவே தோன்றுகிறது.

எனவே இந்த ஒராண்டு காலமாக எனது பதிவுகளை படித்து பயன்படுத்தி மற்றும் பயன்படுத்த போகும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் அன்னை சரஸ்வதி தேவியின் அனுகிரகம் முழுவதுமாக கிடைத்து உலக வாழ்க்கையின் இன்பங்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்று இன்பமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு விடைபெறுகிறேன். 

மீண்டும் சில முக்கிய பதிவுகளில் சந்திப்போம். சென்ற வருடம் விஜயதசமி நன்னாளில் இந்த தொடர் பதிவை வெளியிட்டோம். இதற்கு உதவியாக இருந்த அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் எல்லா சொந்தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமோடு

குறிச்சொற்கள்

கட்டுரைகள் தமிழ்நாடு Prof.k.Nagarajan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண