அகில இந்திய ஓ.பி.சி ஒருங்கிணைப்புக்குழுவின் வேண்டுகோளை ஏற்று, பல்லாண்டுகளாக ஓபிசி மக்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் ஏமாற்றி வரும் மத்திய அரசின் செயலைக்கண்டித்து, இடஒதுக்கீடு சட்டம் செயல்படுத்தவா? அல்லது பூசையில் வைக்கவா? என்று நீதிகேட்டு "விநாயகர் சதுர்த்தி" தினத்தில் வழிபாட்டின்பொழுது பூசையில் வைக்கப்பட்டது. தமிழகம் முழுவது நடைபெற்ற இந்த நிகழ்வில், மக்கள் அவரவர் இல்லங்களில் வழிபடும்பொழுது இடஒதுக்கீடு பதாகைகள் வைத்து பூசை செய்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி சித்தி விநாயகர், சக்தி விநாயகர் போன்று விநாயகருக்கு "ஓ.பி.சி.விநாயகர்" பெயர்சூட்டியும் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிக்கொண்டனர்.
விளம்பரங்கள்
இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஓ.பி.சி விநாயகரிடம் வேண்டுகோள் வைத்து நூதன போராட்டம்.
Admin
22 Aug 2020 | 08:08 PM
குறிச்சொற்கள்