தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
பல்கலைக் கழக அளவில் தங்கப்பதக்கம் வென்ற தாரகை-க்கு வாழ்த்துகள்!

பல்கலைக் கழக அளவில் தங்கப்பதக்கம் வென்ற தாரகை-க்கு வாழ்த்துகள்!

Radheyan 24 Oct 2024 | 06:31 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரு.அய்யன்ராஜ் - திருமதி.வரதலட்சுமி தம்பதிகள். அய்யன்ராஜ் அவர்கள் வளைகுடா நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இத்தம்பதியினருக்கு 2 மகன்களும், அர்ச்சனா என்ற மகளும் உள்ளனர்.  

சிவகசி ஸ்ரீ காளீஸ்வரி கலை அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) இளங்கலை வணிக மேலாண்மை (BBA) துறையில் கல்லூரியில் முதல்மாணவியாக தேர்ச்சி பெற்ற அர்ச்சனா, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் & டெக்னாலஜி-யில் இரண்டாண்டுகள் கால அளவுடைய முதுநிலை வணிக மேலாண்மை (MBA) மாணவியாகச் சேர்ந்து படித்துவந்தார்.


மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலும், அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும்  எபிஏ (MBA) பிரிவில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எம்பிஏ இறுதியாண்டு படித்து தேர்வெழுதியிருந்த மாணவி அர்ச்சனா, மதுரை காமராஜர் பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இதனையடுத்து கடந்த வாரம் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அர்ச்சனாவுக்கு தங்கப்பதக்கமும், சான்றிதழும் வழங்கிப்பாராட்டினார். இந்நிலையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களை மாணவி அர்ச்சனா சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.


பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு சமுதாயப்பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

குறிச்சொற்கள்

சாதனையாளர்கள் தமிழ்நாடு archana thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண