தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
கட்டபொம்மன் அகாடமி மாணவி நிஷிந்தா குரூப்2ஏ தேர்வில் வெற்றி!

கட்டபொம்மன் அகாடமி மாணவி நிஷிந்தா குரூப்2ஏ தேர்வில் வெற்றி!

Radheyan 29 Jul 2025 | 01:23 PM
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மன் அகாடமி மாணவி பி.நிஷிந்தா குரூப் 2ஏ தேர்வில் வெற்றிபெற்றதையடுத்து  உள்ளாட்சி நிதித்தணிக்கை உதவி ஆய்வாளர் (Assisatan Inspector In Local Fund Audit) பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து சமுதாயத் தலைவர்கள் நிஷிந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு,

சேலம் மாவட்டம், பாரப்பட்டி தின்னப்பட்டியான் காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சேர்ந்த திரு.பழனிச்சாமி -திரு.பாக்கியவதி தம்பதியினரின் மகள் பி.நிஷிந்தா. இவர் இளங்கலை ஆங்கிலம் (B.Sc) பட்டம் பெற்றவர். இவருக்கு தமிழ்நாடு காவல்துறை கமேண்டோ பிரிவில் பணியாற்றும் திண்டுக்கல் - மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த  திரு.சரபோஜி பாண்டியன் என்பவரோடு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். கடந்த சில வருடங்களாக குரூப் தேர்வுகளுக்காக பயிற்சி மேற்கொண்டு வந்த பி,நிஷிந்தா, கடந்தாண்டு (2024) 'வீரபாண்டிய கட்டபொம்மன் அகாடமி' உதவியுடன் சென்னை அண்ணாநகரிலுள்ள புகழ்பெற்ற சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றார். இதன் தொடர்ச்சியாக சென்ற ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்திய குரூப்2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதனையடுத்து நேற்று (28.07.2025) சான்றிதழ் சரிபார்ப்புப்பணி நடைபெற்றது. இறுதியாக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி பரிவர்த்தனைகளை தணிக்கை செய்யும் துறையான   உள்ளாட்சி நிதி தணிக்கை துறை (Local Fund Audit Department) யில் நிதித்தணிக்கை உதவி ஆய்வாளர்  (Assisatan Inspector In Local Fund Audit) ஆக நியமனம் செய்யப்பட்டார்.

குரூப்2ஏ தேர்வில் வெற்றிபெற்று  உள்ளாட்சி நிதித்தணிக்கைத் துறை உதவி ஆய்வாளராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நிஷிந்தா-வுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், கட்டபொம்மன் அகாடமி பயிற்சி மைய தேர்வுத்துறை பொறுப்பாளர் பி.இராமராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

சாதனையாளர்கள் தமிழ்நாடு Nishintha thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண