தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மோனிகா - மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் சேர விருப்பம்!

மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மோனிகா - மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் சேர விருப்பம்!

Radheyan 30 Jul 2025 | 07:19 PM
பகிர்:

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி எம்.மோனிகா இளநிலை மருத்துவத்திற்கான நீட் நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று சென்னை மருத்துவக்கல்லூரி சேர்ந்தார். இதன் விவரம் வருமாறு,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் கீழப்பூலாங்கல் கிராமத்தைப் பூர்வீகமாக கொண்ட திரு.முருகன் - திருமதி.பாப்பா தம்பதியினரின் மகள் செல்வி.மு.மோனிகா அருப்புக்கோட்டை எஸ்பிகே பெண்கள் மேல்நிலைபள்ளியில் படித்துவந்தார். பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 591 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். இதனைத்தொடர்ந்து இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வுவில் 567 மதிப்பெண் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார். மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் படிக்க விரும்பும் மோனிகாவுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்டு 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அருப்புக்கோட்டை இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் உறுப்பினரான மோனிகாவின் தந்தையார் திரு.முருகன் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மருத்துவத்துறையில் நுழையும் மோனிகா பல்வேறு சாதனைகள் புரிய அருப்புக்கோட்டை இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. மோனிகா விரும்பும் கல்லூரியில் இடம் கிடைக்கவும், அங்கும் தன் சாதனைகளைத் தொடரவும் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

சாதனையாளர்கள் தமிழ்நாடு Monika thottianaicker www.thttianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண