தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
நகர்ப்புற உள்ளாட்சி வெற்றி நாயகி! - திருமதி.P.ராதா மாரிமுத்து

நகர்ப்புற உள்ளாட்சி வெற்றி நாயகி! - திருமதி.P.ராதா மாரிமுத்து

Radheyan 14 Mar 2022 | 01:38 AM
பகிர்:

திருமதி.P.ராதா.M.Com அவர்கள் 25.05.1980-இல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் திரு.பால்ராஜ் - திருமதி.புஷ்பம் தம்பதியினருக்கு மகளாகப்பிறந்தார். திருமதி.ராதா அவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரிலுள்ள வி.பி.எம்.முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் (B.Com) மற்றும் முதுகலை வணிகவியல் (M.Com) பட்டமும் பெற்றுள்ளார், இராஜபாளையம் திரு.மாரிமுத்து அவர்களை மணமுடித்துள்ளார். இத்தம்பதிகளுக்கு M.தருண் என்ற மகனும் M.கௌசீலா என்ற மகளும் உள்ளனர்.

இராஜபாளையம் திரு.லிங்கசாமி நாயக்கர் - திருமதி.கிருஷ்ணம்மாள் ஆகியோரின் மகனான திரு.மாரிமுத்து அவர்கள் கடந்த இருபது வருடங்களாக "நியூ பாரத் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ்" என்ற பெயரில் இராஜபாளையத்தில் வணிக நிறுவனம் ஒன்றை சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்.


அரசியல் மீதான ஆர்வம்  காரணமாக 2016-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைந்தவர், தன் திறமையான செயல்பாட்டின் காரணமாக குறுகிய காலத்திலேயே இராஜபாளையம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணியின் ஓருங்கிணைப்பாளராக பணியாற்றும் வாய்ப்பினை பெற்றார்.

கடந்த 2021-இல் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் தனது தனித்துவமான செயல்பாட்டால் மாவட்டக் கழகத்தின் கவனத்தைப்பெற்றார். அதனையடுத்து கடந்த பிப்ரவரி-19 ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இராஜபாளையம் நகரமன்றத்திற்கு உட்பட்ட 31-வது வார்டில் தனது துணைவியார் திருமதி.ராதா மாரிமுத்து அவர்களை உதய சூரியன் சின்னத்தில் களமிறக்கி மகத்தான வெற்றி பெற்று நகரமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இராஜபாளையம் நகராட்சியில் தான் போட்டியிட்ட வார்டில் கம்பளத்தார் சமுதாய வாக்குகள் 10-க்கும் குறைவாகவே இருந்தபோதிலும் தனது சுயநலமில்லா செயல்பாட்டாலும், அப்பகுதியில் தான் செய்த நற்பணிகளாலும் கட்சி தலைவர்களின் ஆதரவையும், மக்களின் அன்பையும் பெற்று திரு.மாரிமுத்து-திருமதி.ராதா தம்பதியினர் பெற்றுள்ள இந்த வெற்றி மூலம் திறமையானவர்களுக்கு தேர்தல் போட்டியிடும் வாய்ப்பை பெறுவதும், வெல்வதும் சாதி ஒரு தடையல்ல என்று நிரூபித்துள்ளனர். நகரமன்ற உறுப்பினராக செயல்படும் இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி வாக்களித்த மக்களுக்கும், வாய்ப்பளித்த கட்சிக்கும்  விசுவாசத்தோடு பணியாற்றி சமுதாயத்திற்கு பெருமை சேர்த்து அரசியலில் அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர வாழ்த்துகிறோம்

குறிச்சொற்கள்

அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு Radha thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண