தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
நம்மவர் நல்லவர்!- வாக்குகளை வாரிக்கொடுத்த மக்கள்!

நம்மவர் நல்லவர்!- வாக்குகளை வாரிக்கொடுத்த மக்கள்!

Radheyan 06 Apr 2022 | 03:58 PM
பகிர்:

திரு.K.ராம்குமார் M.A.,B.L., அவர்கள் 1982-ஆம் வருடம் ஜூன் திங்கள் ஒன்றாம் நாள் தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகா, வாசுதேவநல்லூர் அருகேயுள்ள வெள்ளானைக்கோட்டை கிராமத்தில் திரு.A.கிருஷ்ணசாமி நாயக்கர்  - திருமதி.K.வேலம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். தந்தையார் திரு.கிருஷ்ணசாமி நாயக்கர் ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றியவர். 

திரு.ராமகுமார் சாத்தூர் எஸ்.ஆர்.நாயுடு கல்லூரியில் வரலாற்றுத்துறையில் இளங்கலை பட்டமும், இராஜபாளையம் ராஜூஸ் கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றவர், சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் இளநிலை சட்டம் பயின்றார். இவருக்கு திருமணமாகி திருமதி.சக்திகா என்ற மனைவி உள்ளார்.

திரு.கிருஷ்ணசாமி நாயக்கர் அவர்களின் மாணவராக இருந்த மத்திய தொழில்துறை முன்னாள் இணை அமைச்சராக பதவி வகித்த அமரர்.அருணாச்சலம் அவர்கள், தன் ஆசிரியர் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக சுக துக்கங்களில் முன்னின்று அன்பு பாராட்டி மகிழ்ந்த நிகழ்வுகளே திரு.ராம்குமார் அவர்களுக்கு அரசியல் மீதான பரிட்சயம் ஏற்படக்காரணமாக இருந்தது. அத்தோடு அம்மா வழி தாத்தா திரு.குமாரசாமி நாயக்கர் கிராம முன்சீப்பாக இருந்தவர் என்பதால் ராம்குமார் அவர்களின் குடும்பம் கிராமத்தில் முதல் குடிமகன் அந்தஸ்தில் இருந்ததும் கூடுதல் பலமாக இருந்தது.

இப்பின்னனியோடு 2012-இல் அரசியலில் நுழைந்தவர் பாரதிய ஜனதா கட்சியில் சக்திகேந்திரா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஒன்றிய பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் தற்பொழுது மாவட்ட வழக்கறிஞர் அணிப்பிரிவின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிந்து தென்காசி மாவட்டமாக உதயமாகியபின் முதன்முறையாக கடந்த 2021- அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்றத்தேர்தலில் முதல்முறையாக தேர்தல் களம் கண்ட திரு.ராம்குமார் மகத்தான வெற்றிபெற்று ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுமார் 4500 வாக்காளர்களைக் கொண்ட இந்த ஊராட்சியில் 150 வாக்குகளே தான் சார்ந்த சமுதாய வாக்குகளாக இருந்தபொழுதும் மக்களுக்கு திரு.இராம்குமார் குடும்பத்தின் மீதான மதிப்பும், நம்பிக்கையுமே பணபலம், சாதி பலம் நிறைந்த வேட்பாளர்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவது சாத்தியமானது. இளம் அரசியல் தலைவரான திரு.இராம்குமார் கிடைத்த இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்து தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் வகையில் பணியாற்றி , சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொண்டு வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு Mr.K.Ramkumar thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண