தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை!
விளம்பரங்கள்
அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் - சின்னமனூர்.திரு.M.சேகர்

அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் - சின்னமனூர்.திரு.M.சேகர்

Admin 27 May 2020 | 06:45 PM
பகிர்:

திரு.M.சேகர் அவர்கள் 05.03.1970-ல் தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள புலானந்தபுரம் கிராமத்தில் திரு.மாரி நாயக்கர்-திருமதி.பழனியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். உயர்நிலைக்கல்வி வரை பயின்றுள்ளவர், தன் பெற்றோர்களுக்கு ஆதரவாக விவசாயப் பணிக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி திருமதி.S.மலர்க்கொடி (இவரைப் பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிறத்திலுள்ள பெயர் மீது விரல் வைக்கவும்) என்ற மனைவியும், S.ராஜசேகர் என்ற மகனும் உள்ளனர்.

postgallery(73)

விவசாயப் பணியுடன் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார் திரு,சேகர் அவர்கள். கார்த்திக்ராஜா என்ற பெயரில் நிறுவனத்தை புலானந்தபுரத்தில் தொடங்கி, விவசாய உரங்கள், சொட்டுநீர் பைப்கள் மற்றும் அரிசி வகைகளை விற்பனை செய்து வருபவர், அதே பெயரில் சின்னமனூரில் விவசாய மருந்துகள் விற்பனையகத்தையும் நடத்தி வருகிறார். தவிர முத்தால் நாயக்கர் ரைஸ்மில் என்ற பெயரில் நெல் அரவை ஆலையை பூர்வீகமாக நடத்திவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவரின் ரசிகராக இருந்து, 1980-களில் அரசியலுக்கு வந்தவர். புலானந்தபுரம் கிளைக்கழக செயலாளராக சுமார் இருபது ஆண்டுகாலம் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். அரசின் நலத்திட்டங்கள் ஏழை-எளியவரை சென்றடைய பல்வேறு உதவிகளை செய்துள்ளார். தேர்தல் காலங்களில் தீவிரப்பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகிறார். கடந்த பத்தாண்டுகளாக ஊராட்சிக் கழக செயலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2019- ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் துணைமுதல்வர் மாண்புமிகு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன் திரு.ஓ.பி.ரவீந்திரநாத் அவர்களின் வெற்றிக்காக அரும்பாடு பட்டார்.

இதன் காரணமாக கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் புலானந்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பளராக போட்டியிடும் வாய்ப்பு கிட்டியது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது துணைவியார் திருமதி.மலர்க்கொடி சேகர் (இவரைப் பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிறத்திலுள்ள பெயர் மீது விரல் வைக்கவும்)அவர்களை ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராகக் களமிறக்கி வெற்றிவாகை சூடினார்.

postgallery(73)

தேனி மாவட்டம் இராஜகம்பளத்தார்கள் மிக அதிகப்படியானோர் வசிக்கும் மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட்டவர்களும், வெற்றி பெற்றவர்களும் மிக சொற்பமே. திரு.சேகர் அவர்கள் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தன் சேவையை புலாணந்தபுரத்துடன் சுருக்கிக்கொள்ளாமல், மாவட்டம் முழுவதும் கம்பளத்தார் வசிக்கும் கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சமுதாய மக்களை ஒன்று திரட்டி,வழிநடத்தி வரும் காலங்களில் மிக அதிகப்படியான உள்ளாட்சிப் பிரதிநிதிகளை உருவாக்குவதுடன், அவரும் அம்மாவட்டத்தின் கம்பளத்தாரின் முகமாக உயர வேண்டும். மிக அதிக மக்கள்  வாழும் மாவட்டமாக இருப்பதால், மிகச்சிறப்பாக செயல்படுவதின் மூலமாக மேலும் பற்பல பதவிகளைப்பெற்று கம்பளத்தாரின் குறைகளை போக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு Chinnamanur.Mr.Sekar Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண