தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
கம்பளத்தார் அழைக்கும் ஸ்ரீகருவலூர் மாரியம்மன் மஹா கும்பாபிஷேக விழா

கம்பளத்தார் அழைக்கும் ஸ்ரீகருவலூர் மாரியம்மன் மஹா கும்பாபிஷேக விழா

Radheyan 13 Oct 2022 | 04:51 PM
பகிர்:

அன்புடையீர்

எல்லாம்வல்ல கருணை காடலாக விளங்கக்கூடிய அம்பிகையின் திருவருளால் நமது கருக்குப்பாளையம் கிராமத்தில் வெகு காலமாக தன் அருளால் வேண்டியவர்க்கு வேண்டிய வண்ணம் அருள்புரிந்து பல இடர்களை நீக்கி இம்மையிலும், மறுமையிலும் பக்த பெருமக்களுக்கு அருள் புரிந்து வரும் அருள்மிகு கருவலூர் மாரியம்மன் திருக்கோயில் கோபுர வர்ணங்களுடன் புதிதாக அமைக்கப்பட்டு மகாகும்பாபிஷேக விழாவானது நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 13ம் நாள் (30.10.2022) ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதியும் மூலம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று காலை 7.15 மணிக்குமேல் 8.15 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் மகா கும்பாபிஷேக விழா கூனம்பட்டி திருமடம் ஸ்ரீ.தி. சேக்கிழார் பிரபு சுவாமி அவர்கள் தலைமையிலும் விஜயமங்கலம். அப்பரடிப் பொடி புலவர் திரு.வி.சொக்கலிங்கம் ஐயா அவர்கள் மற்றும் பக்த பெருமக்களின் முன்னிலையிலும் ஸ்ரீ ஸர்வசித்தி விநாயகர், ஸ்ரீ மங்கள விநாயகர், ஸ்ரீ கருவலூர் மாரியம்மன் மற்றும் காவல் தெய்வம் முனியப்பன், சப்த கன்னிமார் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தகோடிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு பதினாறு செல்வங்கள் பெற்று பெரு வாழ வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.



இப்படிக்கு 

ஊர் பட்டகாரர்                                                                                                                                                                                 ஊர் நாயக்கர், ஊர் பொதுமக்கள்                                                                                                                                      மற்றும் விழாக்குழுவினர்                                                                                                                                                கருக்குப்பாளையம். 


குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண