தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
சமூக நலத்துறை அமைச்சர் நடத்தி வைக்கும் K.S.K.ஞானகுருசாமி இல்லவிழா!

சமூக நலத்துறை அமைச்சர் நடத்தி வைக்கும் K.S.K.ஞானகுருசாமி இல்லவிழா!

Radheyan 06 May 2023 | 11:58 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் இராஜகம்பளத்தார் சமுதாயத்தின் முக்கிய முகமாக அறியப்படுபவரும், புதூர் ஒன்றியத்தின் மூத்த அரசியல் தலைவருமாக இருந்து வருபவர் திரு.K.S.K.ஞானகுருசாமி. இவர் தற்போது தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். ஒன்றியச் செயலாளர், ஒன்றியக்குழு உறுப்பினர், கூட்டுறவு சங்கப்பதவி என பல்வேறு முக்கிய பொறுப்புகளை அலங்கரித்து அரசியல் களத்தில் தவிர்க்கமுடியாத ஆளுமையாக நிலைநிறுத்திக்கொண்டுள்ளவர்.


இவரது பெயர்த்தியும், மூத்த மகனான எல்.ஐ.சி முகவரும், ஒப்பந்ததாரருமான திரு.சூர்யகுமார், மின்வாரிய பொறியாளர் திருமதி. கீதாதேவி தம்பதியரின் மகளான செல்வி.S.ஸ்ரீஜா-வுக்கு பூப்புனித நன்நீராட்டு விழாவினை வரும் ஞாயிற்றுக்கிழமை (14.05.2023) அன்று காலை 10.30 மணியளவில் புதூர்-குளவை ஸ்ரீ கம்மவார் திருமண மண்டபத்தில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.மார்க்கண்டேயன் தலைமையில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் நடத்தி வைக்கவுள்ளார்.


தொழிலதிபர் எம்.மணிவாசகன் முன்னிலையில், புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.செல்வராஜ் அவர்களின் வரவேற்புரையோடு நடைபெறவுள்ள இந்த விழாவில் புதூர் ஒன்றியக்குழு தலைவர் சுசீலா தனஞ்செயன், த.வீ.க.பண்பாட்டுக்கழக மாநில தலைவர் ஆர்.வரதராஜன், கௌரவ ஆலோசகர் நல்லாசிரியர் சங்கரவேலு, வீ.க.பொ.இராஜம்பள சமுதாய நலச்சங்க தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்களும், துரைப்பாண்டி, பெரியபூசு நாயக்கர், பெருமாள் நாயக்கர், சேதுபாண்டி, மலைராஜன் உள்ளிட்ட சமுதாய முன்னோடிகளும், ஊராட்சி மன்றத் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், இந்நாள், முந்நாள் அரசு அதிகாரிகள், ஆசிரியப்பெருமக்கள் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஞானகுருசாமி, இளைய மகனும் ஆசிரியருமான சுரேஷ்குமார், மருமகளும் ஒன்றியக்குழு உறுப்பினருமான சித்ராதேவி சுரேஷ்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு K.S.K.Gnanagurusamy thottianaicker www.thottianaicker.co
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண