தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
சின்ன அரண்மனையார் இல்ல திருமணவிழா!

சின்ன அரண்மனையார் இல்ல திருமணவிழா!

நிருபர் 19 Aug 2023 | 11:26 PM
பகிர்:

பொள்ளாச்சி ஜமீன் இராமபட்டிணம் சின்ன அரண்மனையார் திரு.வி.செல்வராஜ் , கோவை தெற்கு மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க செயலாளர்  திரு.எஸ்.வெங்கடேஷ்குமார் ஆகியோர் இல்ல திருமணவிழா வரும் திங்கள்கிழமை (21.08.2023) அன்று காலை நடைபெறவுள்ளது. இதன் விவரம் வருமாறு,


கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் இராமபட்டிணம் ஜமீன் வம்சாவளியைச் சேர்ந்த தெய்வத்திரு. வேங்கடகிருஷ்ண நந்தகோபல எர்ரப்ப கவுண்டர் மகன் திரு.வி.செல்வராஜ் - திருமதி.எஸ்.சித்ராதேவி ஆகியோரின் அன்புமகன் எஸ்.நந்தகுமார் B.Com (CA) - பொள்ளாச்சி வட்டம் மண்ணூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.ஆறுமுகம் - திருமதி.சுப்புலட்சுமி ஆகியோரின் அன்புமகள் ஆ.சுபலட்சுமி M.B.A., ஆகியோரது திருமணம் பொள்ளாச்சி பாலக்காடு சாலையிலுள்ள தாம்சன் ஆடிட்டோரியத்தில் வரும் 21.08.2023 திங்களன்று காலை 5 மணி முதல் 6 மணிக்குள் நடைபெறவுள்ளது. முன்னதாக வரவேற்பு நிகழ்ச்சி 20.08.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி முதல் மேற்படி ஆடிட்டோரியத்தில் நடைபெறவுள்ளது.


மணமகள் சுபலட்சுமி கோவை தெற்கு மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் செயலாளர் எஸ்.வெங்கடேஷ்குமார் அவர்களின் தங்கை மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திருமண விழாவில் இராமபட்டிணம் ஜமீன்தார் திரு.விஷ்ணுகாந்த சக்திவேல் இராஜா குடும்பத்தினர் மற்றும் இளையபட்டம் ஜமீன்தாரிணி திருமதி.சுகன்யா செந்தில்ராஜா ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வதிக்க உள்ளனர்.


மாவட்ட செயலாளர் மற்றும் சின்ன அரண்மனையார் இல்ல திருமண விழாவிற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், மாவட்ட தலைவர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் ஜி.தர்மப்பிரகாஷ், இளைஞரணி செயலாளர் கே.குணசேகர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Ramapattinam Wedding Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண