தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் இல்ல விழா!- தலைவர்கள் வாழ்த்துச்செய்தி!

இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் இல்ல விழா!- தலைவர்கள் வாழ்த்துச்செய்தி!

Radheyan 22 Nov 2023 | 10:47 PM
பகிர்:

கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.பாக்கியலட்சுமி இல்லத்திருமண வரவேற்புவிழா இன்று (23.11.2023) மாலை ஈச்சனாரியில் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். இதன் விவரம் வருமாறு,

கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மகளிரணி அமைப்பாளராக ஈச்சனாரியைச் சேர்ந்த திருமதி,பாக்கியலட்சுமி பொறுப்பு வகித்து வருகிறார். இவரது கணவர் திரு.என்.நாகராஜ் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களின் அன்புமகள் என்.தாரணி B.E., பெங்களூருவிலுள்ள TCS  நிறுவனத்தில் மென்பொருள்துறை பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும், கோவை மாவட்டம், காரமடை, சின்னத்தொட்டிபாளைத்தைச் சேர்ந்த திரு.சி.மணிமன்னன்-திருமதி.எம்.தீபா ஆகியோரின் அன்பு மகனும், பெங்களூருவிலுள்ள அமோசன் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி வரும் செல்வன் எம்.யோகேஷ் M.B.A., ஆகிய இருவரது ஈச்சனாரி செட்டிபாளையம் சாலையிலுள்ள ஜாஸ்மாதேவி திருமண மண்டபத்தில் இன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.



செல்வி.தாரிணி-செல்வன்.யோகேஷ் ஆகியோரது திருமணத்தையொட்டி மணமக்களுக்கு சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.இராமராஜு, நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் எம்.பழனிச்சாமி, கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் எம்.சிவக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



இதேபோல் கோவை தெற்கு மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க செயற்குழு உறுப்பினர் திரு.புஷ்பராஜ் - திருமதி.முருகேஷ்வரி ஆகியோர் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள ஆர்.பொன்னாபுரத்தில் கட்டியுள்ள புதுமனைப் புகுவிழா இன்று அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், கோவை தெற்கு மாவட்டத் தலைவர் குணசேகர், மாவட்டச் செயலாளர் எஸ்.வெங்கடேஷ்குமார், பொருளாளர் ஜி.தர்மப்பிரகாஷ், இளைஞரணி செயலாளர் கே.குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு K.T.Mohanraj thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண