தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
உயர்மட்ட பொறுப்பாளர்கள் நியமனம்! சமூக சேவையாற்றிட வருக!

உயர்மட்ட பொறுப்பாளர்கள் நியமனம்! சமூக சேவையாற்றிட வருக!

Radheyan 01 Jul 2022 | 05:06 PM
பகிர்:

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 MBC/146 BC சமூகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள சமூகநீதி கூட்டமைப்பின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி ஆகஸ்டு-07 ஆம் தேதி மதுரையில் மாபெரும் மாநாட்டினை நடத்திட திட்டமிடப்பட்டு, மாநாட்டிற்கான கால்கோள் விழா கடந்த 29-ஆம் தேதி பிரமாண்ட முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்திய வரலாற்றில் 200-க்கும் மேற்பட்ட சாதிகள் இணைந்து மாபெரும் மாநாட்டை நடத்துவது இதுவே முதல்முறை. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சமூகநீதி மாநாட்டினை வெற்றிகரமாக நடத்திமுடிக்க, அனைத்து சாதியினரையும் உள்ளடக்கிய பல்வேறு குழுக்களை அமைத்து பணிகள் முடுக்கிவிடப்பட்டு வருகின்றன.

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் உயர்மட்டக்குழு மற்றும் பிரச்சாரக்குழுவில் விடுதலைக்களம் கொ.நாகராஜன், தீர்மானக்குழுவில் அறக்கட்டளை தலைவர் மு,பழனிச்சாமி, ஒருங்கிணைப்புக்குழுவில் ஓய்வு பெற்ற பொறியாளர் பெ.இராமராஜ், மலர்க்குழுவில் போடி.சௌந்திர பாண்டியன், நிதிக்குழுவில் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜ், ஊடகக்குழுவில் முகப்பேர் இராஜா உள்ளிட்டோர் முதற்கட்டமாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதேபோல் இன்னும் பல்வேறு குழுக்கள் இருக்கும் நிலையில், சமுதாயப் பணியில் ஆர்வமுள்ளோர் செயல்பட முன்வந்தால் அவர்களுக்கு உரிய பொறுப்புகளை வழங்கிட சமூகநீதி கூட்டமைப்பு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விருப்பமுள்ள இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமுதாய சொந்தங்கள் 7395988767 என்ற எண்ணிற்கு தொடபுகொள்க அல்லது வாட்சப் மூலம் தெரியப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Madurai Conference thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண