தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
முப்பெரும்விழா அழைப்பு - அன்பால் அரவணைத்த விருதுநகர்!

முப்பெரும்விழா அழைப்பு - அன்பால் அரவணைத்த விருதுநகர்!

Radheyan 26 Dec 2022 | 02:57 AM
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜு அவர்கள் தனிப்பட்ட விசயமாக சொந்த ஊரான விருதுநகருக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். சொந்த வேலைகளை முடித்துக்கொண்டு, சங்கத்தின் சார்பில் 2023-ஜனவரி'29 இல் சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்படவுள்ள முப்பெரும்விழாவில் கலந்துகொள்ள உறவுகளை சந்தித்து காலண்டர் வழங்கி அழைப்பு விடுத்தார்.


பல்வேறு கிராமங்களுக்கு சென்று முக்கிய தலைவர்களையும், உறவுகளையும் சந்தித்தபொழுது, மிகுந்த அன்புடன் வரவேற்று, முப்பெரும் விழாவில் கலந்துகொள்ளவதாக உறுதியளித்ததோடு, விழா நன்கொடை மற்றும் மலர் விளம்பரங்களுக்கு உற்சாகத்தோடு தாராளமாக நிதியுதவி அளித்தனர். ஒருநாள் பயணத்திற்கு திட்டமிட்டிருந்த நிலையில், சகோதர அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று இரண்டு நாட்கள் பயணத்திட்டத்தை நீட்டித்து, முத்துராமன்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முப்பெரும்விழா குறித்து விளக்கிப்பேசினார். பொருளாளர் சுற்றுப்பயணத்தின்போது நகர மன்ற உறுப்பினர் சரவணன், ஆர்.எஸ்.கண்ணன், ஆசிரியர் செல்வராஜ் ஆகியோர்முழு ஒத்துழைப்பு வழங்கினர். முத்துராமன்பட்டி நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் கே.கே.கண்ணன், இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் முன்னெடுப்புகளை பாராட்டி பேசினார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Virudhunagar thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண