தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
வட்டார வளர்ச்சி அலுவலருக்கு குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பாராட்டு!

வட்டார வளர்ச்சி அலுவலருக்கு குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பாராட்டு!

Radheyan 26 Jan 2023 | 08:49 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், ஊரக வளர்ச்சித் துறையில்  சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் திரு.S.இலட்சுமணராஜூ அவர்களின் பணியினை பாராட்டி, இன்று (26.01.2023) காலை நடைபெற்ற குடியரசுதின விழாவில், மாவட்ட ஆட்சியாளர் திரு.P.மதுசூதன் ரெட்டி, IAS கேடயமும், பாராட்டு  சான்றிதழும் வழங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.S.இலட்சுமணராஜு அவர்கள், மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டப்பணிகளை சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் திறம்பட செயல்படுத்தியதற்காகவும், கோட்டைவேங்கைபட்டியில் புதிதாக கட்டப்பட்ட சமத்துவபுரம் திறப்புவிழாவிற்கு, தமிழக முதல்வர் வருகையின் போது சிறப்பான ஏற்பாடுகளை செய்தமைக்காகவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டது. 

இன்று விருது வழங்கப்பட்ட திரு.S.இலட்சுமணராஜூ, விருதுநகர் மாவட்டம் பாலவனத்தம் கிராமத்தை சேர்ந்தவர். வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் திரு.S.இராமராஜூ அவர்களின் உடன்பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. திரு.S.இலட்சுமணராஜூ அவர்களள் மேலும் பல பாராட்டுதலையும், மேலும் பல விருதுகளை பெற வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Republic day thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண