தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை!
விளம்பரங்கள்
சென்னை மாநகர துணைமேயருடன் சந்திப்பு!

சென்னை மாநகர துணைமேயருடன் சந்திப்பு!

Radheyan 16 Mar 2023 | 01:50 AM
பகிர்:

சென்னை மாநகர துணைமேயர் சைதை.மகேஷ்குமார் அவர்களுடன் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் இன்று மாலை ரிப்பன் மாளிகையிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப்பேசினர். இதுகுறித்து சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் கடந்த ஜனவரி'29 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சென்னை மாநகர துணைமேயர் மகேஷ்குமார் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். விழாவில் துணைமேயர் வாழ்த்துரை வழங்க தயாராக இருந்தார். ஆனால் இறுதியாக விழா பேருரையாற்ற இருந்த தலைமை விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள், விமான நிலையம் செல்ல வேண்டியிருந்த காரணத்தால் முன்னதாகவே தலைமை உரையாற்றினார். சம்பிரதாயப்படி மூத்த அமைச்சரும், நிர்வாகியுமான தலைமை விருந்தினர் முன்னதாகவே உரையாற்றிவிட்டபடியால், ஜூனியர் அமைச்சரான பி.கே.சேகர்பாபு, துணைமேயர் ஆகியோர் விழாவில் வாழ்த்துரை வழங்க இயலவில்லை. மேலும், அமைச்சர்களை வழியனுப்பச் சென்ற துணைமேயருக்கு நினைவுப்பரிசு வழங்கமுடியாமல் போனது..

இதனையடுத்து, இன்று மாலை ரிப்பன் மாளிகையில் துணைமேயர் அலுவலகத்தில் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையில் சென்ற இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் வணக்கத்திற்குறிய துணைமேயர் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி, விழாவில் கலந்துகொண்டதற்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். அப்போது பேசிய துணைமேயர் கூட்ட ஏற்பாடுகள் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது என்றும், விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சியை தந்ததாக தெரிவித்தார்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Deputy Mayor thottianaicker. www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண