தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுடன் நலச்சங்க நிர்வாகிகள் சந்திப்பு!

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுடன் நலச்சங்க நிர்வாகிகள் சந்திப்பு!

Radheyan 12 Dec 2023 | 04:35 PM
பகிர்:

தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். இதன் விவரம் வருமாறு,

தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களை இன்று (12.12.2023) காலை அவரது இல்லத்தில் சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், துணைச்செயலாளர் ஏ.முருகன், மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்துப்பேசினர். அப்போது துணைச்செயலாளர் முருகன் அவர்களை நலம் விசாரித்த அமைச்சர் சங்கத்தின் கோரிக்கைகளை அவரிடம் கேட்டறிந்தார். அடுத்த நிதியாண்டு துவக்கத்தில் மீண்டும் நினைவுபடுத்துமாறு முருகனிடம் அமைச்சர் கூறினார்.


இதனையடுத்து, அமைச்சர் மகனும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக அறியப்படுபவருமான கே.என்.அருண் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது சமூகநீதி கூட்டமைப்பின் செயல் தலைவர் பி.இராமராஜ், தெலுகு சம்மேளனத்தின் லட்சுமி நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு K.N.Nehru thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண