தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
கோவை மாவட்ட மகளிரணி நிர்வாகிகளுக்கு  பாராட்டுவிழா!

கோவை மாவட்ட மகளிரணி நிர்வாகிகளுக்கு பாராட்டுவிழா!

Radheyan 17 Jan 2024 | 07:45 PM
பகிர்:

கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மகளிரணிக்கான புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் பாராட்டு விழா கூட்டம் நேற்று (16.01.2024) ஈச்சனாரி ஊர்நாயக்கர் இல்லத்தில் தொழிலதிபர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்துவித்தார்.  அதன்பிறகு ஊர் நாயக்கர் முத்துசாமி, ஈச்சனாரி மகாலிங்கம்,  காளிமுத்து, பண்ணாரி தங்கராஜ், ராஜ்மோகன், ஜெயராமன், சிவா உள்ளிட்டோர் பாராட்டிப்பேசினர். .

இதில் தேவராட்ட குழு பொறுப்பாளராக கமல் மாரிமுத்து, வடக்கு மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர்களாக லலிதாம்பிகை B.Com, சுவாதி ஆகியோரும், ஈச்சனாரி கிளை பொறுப்பாளராக  சண்முகப்பிரியா B.Com.,MBA., கவுண்டம்பாளையம் பகுதி பொறுப்பாளராக ராஜேஸ்வரி விஜயகுமார், உக்கடம் பகுதி பொறுப்பாளராக கலைவாணி, கோணவாய்க்கால் பாளையம் பொறுப்பாளராக தனலட்சுமி, இணை பொறுப்பாளராக தனபாக்கியம் ஆகியோரை கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் நியமனம் செய்து உத்தரவிட்டனர்.

அதேபோல் கோவை வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளராக ஜெயபால்,  துணைச் செயலாளராக சுரேஷ், தேவராட்டக்குழு இணை பொறுப்பாளராக வடிவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 


இதனையடுத்து மகளிரணி நிர்வாகிகள் லலிதாம்பிகை, சுவாதி உள்ளிட்டோர் ஏற்புரையாற்றுகையில், கோவை மாவட்டத்தில்  சமுதாய மக்களை ஒருங்கிணைத்து வளர்ச்சியை நோக்கிச்  செல்வதை இலக்காகக் கொண்டு செயல்பட முழுமையாக பாடுபடப்போவதாக தெரிவித்தனர். 

இறுதியாக புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Kovai thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண