தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
தேசிய நெடுஞ்சாலைகளில் நடப்படும் பச்சை நிற தூண் எதற்காக என்று தெரியுமா?

தேசிய நெடுஞ்சாலைகளில் நடப்படும் பச்சை நிற தூண் எதற்காக என்று தெரியுமா?

Radheyan 13 Jun 2024 | 02:13 AM
பகிர்:

நீங்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது சென்டர் மீடியனில் செடிகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதை நாம் பார்த்திருப்போம். இந்த செடிகள் சென்டர் மிடியனில் நடப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் எதிர் திசையில் வரும் வாகனங்களின் ஹெட்லைட் ஒளி இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்க இந்த செடி உதவுகிறது. 

இதன் காரணமாகவே தேசிய நெடுஞ்சாலைகளில் செடி நடப்படுகிறது. ஆனால் அனைத்து இடங்களிலும் செடி நடும் அளவிற்கு செண்டர் மீடியனில் இடம் இல்லாத சூழ்நிலை இருக்கும். இந்த இடங்களில் நடுவே சிமெண்ட் ஸ்லாப் கொண்டு சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு இருக்கும். இப்படியான இடங்களில் வாகனம் வரும்போது நிச்சயம் அது எதிர் திசையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு ஹெட்லைட் தொந்தரவாக இருக்கும்.

இந்த பிரச்சினையை தடுப்பதற்காக தற்போது தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் சென்டர் மீடியனில் செடி வைக்க முடியாத இடங்களில் ஆண்டி கிளார் ஸ்கிரீன் எனப்படும் சில பச்சை நிற சிறிய தூண் போன்ற கருவியை பொருத்தி வருகிறார்கள். இது வாகனம் அதிவேகமாக வரும் போது எதிரே வரும் வாகனத்தில் உள்ள ஹெட்லைட் தொந்தரவு செய்யாத வகையில் தடுத்து நிறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முதற்கட்டமாக இது விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை சுமார் 194கிமீ தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்தது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பணி துவங்கியது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் சுமார் 80-100கிமீ வேகத்தில் பயணிக்க கூடியதாக இருக்கின்றன. இங்கே நடுவே கான்கிரீட் பாதை கொண்டு தான் சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு செடி வைப்பது என்பது சாத்தியமில்லாமல் இருக்கிறது.

செடி வைக்கும் அளவிற்கு சென்டர் மீடியன் அமைக்கப்பட வேண்டும் என்றால் நான்கு மீட்டர் அகலத்திற்கு சென்டர் மீடியனிற்காக இடம் தேவைப்படும். அப்படி இடமில்லாத சூழ்நிலையில், வெறும் கான்கிரீட் ஸ்லாப்புகளைக் கொண்டே செண்டர் மீடியன் அமைக்கப்படும். அந்த இடத்தில் ஒளி எதிரில் வரும் வாகனத்திற்கு தொந்தரவை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் அந்தப் பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் வகையில் தற்போது ஆன்ட்டி கிளார் ஸ்கிரீன்களை தற்போது நெடுஞ்சாலை துறையினர் பொருத்தி வருகிறார்கள். பச்சை நிறத்தில் சிவப்பு தூண் போல இருக்கும் இந்த அமைப்புகளை குறிப்பிட்ட இடைவெளியில் வரிசையாக பொருத்துவதன் மூலம் எதிரில் வரும் வாகனங்களின் ஒளி இரவு நேரத்தில் மற்ற வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்கும்.

இது மட்டுமல்ல சாலையில் அந்த குறிப்பிட்ட வாகனம் செல்லும் பாதையில் ரோடு எப்படி இருக்கிறது என்பதை காட்டுவதற்காக அதன் நடுவே ஸ்டிக்கர்களை பொருத்திருக்கிறார்கள். இந்த ஸ்டிக்கர்கள் ரோடு எந்த வழியாக பயணிக்கிறது என்பதை எளிதாக ஓட்டுனருக்கு காட்டும் வகையில் ரிப்லெக்ட் செய்யும். இதனால் எதிரில் வரும் வாகன ஓட்டிகள் தொந்தரவு இல்லாமல் தைரியமாக வேகமாக பயணிக்க முடியும்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு anti glare Screen thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண