தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
மு.பிரதமர் மாமேதை மன்மோகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

மு.பிரதமர் மாமேதை மன்மோகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

Radheyan 27 Dec 2024 | 08:27 PM
பகிர்:

1990-களில் கடுமையான பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்தபோது நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்து மன்மோகன்சிங் மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கை காரணமாக தேசத்தை பொருளாதரச்சரிவிலிருந்து காத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். தான் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகளை விட இந்தியாவின் தேவைகளை அறிந்து செயல்படும் பொருளாதார சீர்திருத்தவாதியாக மன்மோகன்சிங் பார்க்கப்படுகிறார். 

நாட்டின் முதல் சீக்கியப் பிரதமர் என்ற பெருமைக்குறியவர் மன்மோகன் சிங். 2004-2014 வரை இரண்டு முறை பிரதமராக அதாவது 10 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.  1952 இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்த மன்மோகன் சிங், அதே பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1957 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார டிரிபோஸ் முடித்தார். 1962 இல், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் D Phil பட்டம் பெற்றார். 

1932 செப்டம்பர்'26 இல் பஞ்சாபில் உள்ள காஹ் (இப்போது பஞ்சாப், பாகிஸ்தான்) ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்த மன்மோகன் சிங், இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் 1947-48 இல், குடும்பம் அமிர்தசரஸுக்கு குடிபெயர்ந்தது.

நூறுநாள் வேலைத்திட்டம்,  தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டம், 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச்சட்டம் போன்றவை மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முக்கிய சட்டங்களாகும்.

தான் வகித்த அனைத்து பதவிகளிலும் தனிமுத்திரை பதித்து நாட்டிற்கு பெருமை சேர்த்து, தேசத்தை பொருளாதாரச் சரிவிலிருந்து மீட்டெடுத்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவுக்கு இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு manmohan singh thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண