தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
தேனியிலிருந்து மூன்று அரசுத்துறையை அலங்கரிப்போர்க்கு வாழ்த்து!

தேனியிலிருந்து மூன்று அரசுத்துறையை அலங்கரிப்போர்க்கு வாழ்த்து!

Radheyan 31 Jul 2025 | 08:03 PM
பகிர்:

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி சசிகலா மற்றும் சி.ஜீவானந்தம் ஆகியோர் முறையே ஆசிரியர் தகுத்தேர்வு மற்றும் குரூப் 4 தேர்வில் வெற்றிபெற்று அரசுப்பணியில் இணைந்துள்ளார்கள். இதன் விவரம் வருமாறு,


தேனி மாவட்டம் சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் திரு.அன்புச்செல்வன். பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்ற அன்புச்செல்வம் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக உள்ளார். இவரது துணைவியார் திருமதி சசிகலா பனிரெண்டாம் வகுப்பிற்குப்பின் கல்வியியல் படிப்பில் பட்டயம் பெற்றார். இதனைத்தொடர்ந்து ஆசிரியர் தகுத்தேர்வான TET தேர்வெழுதி வெற்றிபெற்று பணிநியமன ஆணைக்காக சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக காத்திருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருமதி சசிகலா அவர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயம்பாளையம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.


இதேபோல், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் வேலாயுதபுரம் கிராமத்தை சேர்ந்தச் சேர்ந்த திரு.சிவபாரதி - திருமதி. கலாமணி ஆகியோரின் இளைய மகனும், சிறந்த கபடி வீரரும், பொறியியல் பட்டதாரியுமான சி.ஜீவானந்தன் TNPSC GROUP 4 தேர்வில் தேர்ச்சி பெற்று சீனியர் ரெவென்யூ இன்ஸ்பெக்டராக அவரது சொந்த மாவட்டத்திலேயே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தேனி அரண்மனைப்புதூரைச் சேர்ந்த திரு.சேகர் - திருமதி.பவானி ஆகியோரின் மகன் எஸ். மதன்குமார் குரூப்2ஏ தேர்வில் வெற்றிபெற்று தொழிலாளர் நலத்துறையில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முறையே பள்ளிக்கல்வி, வருவாய்த்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ள சசிகலா, ஜீவானந்தம் மற்றும் மதன்குமார் ஆகியோருக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தகவல் உதவி: ரமேஷ்பாபு, தேனி.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு sasikala thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண