தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
சாதனையாளர் விருதுவென்ற சமுதாயத் தலைவர் மகனுக்கு வாழ்த்துகள்!

சாதனையாளர் விருதுவென்ற சமுதாயத் தலைவர் மகனுக்கு வாழ்த்துகள்!

Radheyan 18 Aug 2025 | 09:46 PM
பகிர்:

சாதனையாளர் விருதுவென்ற சமுதாயத் தலைவர் மகனுக்கு வாழ்த்துகள்!

கடந்த வெள்ளிக்கிழமை (15.08.2025) நாட்டின் 79-வது சுதந்திரதினம் நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற நிலையில் அதையொட்டி நடந்த நிகழ்ச்சிகளில் இராஜகம்பள சமுதாயத் தலைவர்களுக்கு பல அமைப்புகள் விருது வழங்கி கௌரவித்துள்ளன. இதன் விவரம் வருமாறு,

79-வது சுதந்திர தினத்தில் நாட்டின் விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்த தலைவர்களுக்கு மரியாதை செய்வதோடு, பெற்ற விடுதலையைப் பேணிக்காக்கும்வகையில் பல்வேறு துறைகளில் திறம்பட செயலாற்றுபவர்களை அடையாளங்கண்டு கௌரவிப்பதை அரசு முதல் தனியார் அமைப்புகள் வரை செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்தவகையில் விருதுநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள லட்சுமி காலனி குடியிருப்போர் நலச்சங்கத் தலைவராக பொறுப்புவகித்து வரும் திரு.வை.மலைராஜன் அவர்கள் ஆற்றிவரும் சமூகப் பணிக்காக விருதுநகர் நகர மன்றத் தலைவர் வழங்கும் சிறந்த சாதனையாளர்'2025 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இராஜகம்பள மகாஜனசங்கத்தின் முன்னாள் தலைவர் அமரர் வையப்ப நாயக்கரின் மகனான திரு.வை.மலைராஜன் லட்சுமி காலனி குடியிருப்போர் நலச்சங்கத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல் தனது சிறப்பான சேவையால் அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெற்ற பகுதியாகவும், பாதுகாப்பு, சுகாதாரம், தூய்மை ஆகியவற்றிற்கு முன்னுரிமை தந்து தனித்துவமிக்க பகுதியாக மாற்றியமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தன்னலமற்ற சேவைக்காக சுதந்திர தின விழா நிகழ்வில் விருதுநகர் நகர மன்றத் தலைவர் திரு.SR.மாதவன் அவர்கள் சிறந்த சமூக ஆர்வலர் விருது வழங்கினார். 

சிறந்த சமூக ஆர்வலர் விருது வென்ற வை.மலைராஜன் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், சமுதாயப்பெருந்தலைவரின் மகன் தன் சமூகப்பணியை சிறிய குடியிருப்புப்பகுதிக்குள் சுருக்கிக்கொள்ளாமல், நாடு தழுவிய அளவில் தந்தையார் வழியில் சமுதாயப்பணியைத் தொடர்ந்திட வேண்டுமாய் கேட்டுக் கொண்டுள்ளார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு vai.malairajan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண