தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
அரசுப்பணிக்கு தேர்வாகியுள்ள காமுத்தாய், ஜனார்த்தனன்-க்கு வாழ்த்துகள்!

அரசுப்பணிக்கு தேர்வாகியுள்ள காமுத்தாய், ஜனார்த்தனன்-க்கு வாழ்த்துகள்!

Radheyan 15 Dec 2025 | 05:27 PM
பகிர்:

தமிழக அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடத்திய குரூப் தேர்வில் திருமதி. காமுத்தாய், பி. ஜனார்த்தனன் ஆகியோர் வெற்றிபெற்று பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சமுதாயத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,

தேனி மாவட்டம் சூலப்புரம் கிராமத்தைச் சேர்ந்த திரு.வேல்முருகன் என்பவரின் துணைவியார் திருமதி ஜெ.காமுத்தாய். இவர் அமைப்பியல் (கட்டடவியல்) துறையில் இளங்கலைப் பட்டமும், நில தொழில்நுட்பவியல் (Geo Technical Engineering) துறையில் முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார். திருமணத்திற்குப்பிறகு அரசுப்பணிக்கு தயாராகிக்கொண்டுவந்த காமுத்தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வில் வெற்றிபெற்று நில அளவை மற்றும் நில ஆவணங்கள் துறை (Survey and Land Records Department) யில் வரைவாளர் (Draughtsman) ஆக சென்னையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், ஆலத்தூர் அருகேயுள்ள மாரநாயக்கனூரைச் சேர்ந்த விவசாயத் தம்பதிகள் திரு.பழனிச்சாமி -  திரு.பழனியம்மாள் ஆகியோரின் அன்பு மகனும், வேதியல்துறை இளங்கலை பட்டதாரியுமான P.ஜனார்த்தனன், குரூப்4 தேர்வில் வெற்றிபெற்று வேளாண்மைத்துறையில் இளநிலை உதவியாளராகப் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசுப்பாணியாளர் தேர்வாணையத் தேர்வில் வெற்றிபெற்று பணிநியமனம் செய்யப்பட்டுள்ள திருமதி.காமுத்தாய், பி.ஜனார்த்தனன் ஆகியோருக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Kamuthai thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண