தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!

ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!

Admin 27 Jul 2026 | 12:43 PM
பகிர்:

கோவை: கோவை புறநகர் மத்திய மாவட்டம், மதுக்கரை ஒன்றிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள திரு. து. சிவசாமி அவர்களை, அக்கட்சியின் கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துகளையும், தங்களது முழு ஆதரவையும் தெரிவித்தனர்.

கோவை மாசேகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த திரு. து. சிவசாமி அவர்களை, கோவை புறநகர் மத்திய மாவட்டம், மதுக்கரை ஒன்றிய அதிமுக செயலாளராக நியமித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி க. பழனிசாமி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமியை நேரில் சந்தித்த சிவசாமி, நியமனத்திற்காக நன்றி தெரிவித்தார்.


இந்த நியமனத்தைத் தொடர்ந்து, அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு சமூகத் தலைவர்கள் சிவசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


அதன் தொடர்ச்சியாக, மாசேகவுண்டன்பாளையத்தில் உள்ள சிவசாமி அவர்களின் இல்லத்தில், வழுக்குப்பாறை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அதிமுக கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து, புதிய பொறுப்பிற்கு வாழ்த்து தெரிவித்து, தங்களது முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு தமிழ்நாடு அரசியல் AIADMK Coimbatore Political News Thottianaicker News கோவை புறநகர் மத்திய மாவட்டம் ஒன்றியச் செயலாளர் d.sivasamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண