தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
அதிமுக விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளராக A. மல்ராஜ் நியமனம்!

அதிமுக விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளராக A. மல்ராஜ் நியமனம்!

Admin 05 Aug 2026 | 12:03 PM
பகிர்:

அருப்புக்கோட்டை வட்டம், குள்ளம்பட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட மல்ராஜ் அவர்கள், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் மாவட்ட இளைஞரணிச் செயலாளராகவும் சமூகப் பணியாற்றி வருகிறார்.

அதிமுகவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் அவர், ஒன்றிய மாணவரணி துணைச் செயலாளர், அம்மா பேரவைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கட்சிப் பணியில் பெற்ற அனுபவம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவருக்கு விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நியமனத்தையடுத்து, தனக்கு இந்தப் பொறுப்பை வழங்கிய கழகப் பொதுச் செயலாளரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு மல்ராஜ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் K.P. ஜெயபெருமாள் மற்றும் தனது அரசியல் வழிகாட்டியான திருச்சுழி மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் டி. கருப்பசாமி (KPN) ஆகியோரை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்து, அவர்களது வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டார்.


விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள மல்ராஜ் அவர்கள், கழகப் பணிகளில் மேலும் சிறப்பாகச் செயல்பட்டு பல்வேறு சாதனைகளைப் படைக்க வேண்டும் என வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ. இராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் கே.கே. கண்ணன், நகரமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். சரவணன், மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் ஏ. காசிராஜன் உள்ளிட்டோர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு அதிமுக நியமனம் தமிழ்நாடு அரசியல் Thottianaicker A. மல்ராஜ் எடப்பாடி பழனிசாமி EPS A Malraj விருதுநகர் IT Wing தொட்டிய நாயாக்கர்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண