தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
சமூகநீதிக்காவலருக்கு கம்பளத்தார்களின் புகழஞ்சலி!

சமூகநீதிக்காவலருக்கு கம்பளத்தார்களின் புகழஞ்சலி!

Radheyan 25 Jun 2021 | 05:17 PM
பகிர்:

இந்தியாவில் 70 விழுக்காடு மக்கள்தொகை கொண்ட பெருங்கொண்ட பிற்படுத்தப்பட்ட (OBC) மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை அரைநூற்றாண்டுகாலம் கிடப்பில் போடப்பட்டிருந்தபொழுது, வாராது வந்த மாமணியாய்  இராஜகுடும்பத்து வாரிசாய் பிறந்து, பாரதப்பிரதமராய் பொறுப்புவகித்தபொழுது, ஆட்சி பறிபோகும் நிலை வந்தபொழுதும், பின்வாங்காமல், ஓபிசி மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கிய சமூகநீதிக்காவலர் மாண்புமிகு விஸ்வநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங்) அவர்களின் 90-வது பிறந்தநாளான இன்று தொட்டிய நாயக்கர் சமுதாயம் நன்றியோடு நினைவுகொள்கிறது.

அன்னாரது 90-வது பிறந்தநாளைப் போற்றும் வகையில் இன்றுமாலை (26.06.2021) 7.00 மணியளவில் காணொளி புகழஞ்சலிக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் மூத்த ஊடகவியாளாலர் திரு.அய்யநாதன், மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.திருமுருகன் காந்தி, மறுமலர்ச்சி திமுக-வின் திரு.செந்திலதிபன், மா.பெ.பொதுவுடமைக்கட்சியின் சென்னை மாவட்ட தலைவர் திரு.வலசா வல்லவன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றுகின்றனர்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு VPSingh thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண