தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
சிபிஎஸ்சி தேர்வில் 496 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம்!

சிபிஎஸ்சி தேர்வில் 496 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம்!

Radheyan 14 May 2025 | 04:53 PM
பகிர்:

சிபிஎஸ்சி தேர்வில் 496 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம்!

நாடுமுழுவதும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெற்றது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக ரிசல்ட்-க்காக ஆவலுடன் காத்திருந்தனர். கடந்த 7 ஆம் தேதி முதலே தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும், நாளை வெளியாகும் என்று பரபரப்பைக்கூட்டி வந்த நிலையில், நேற்று ஒரே நளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டது மத்திய தேர்வு வாரியம்.

இத்தேர்வு முடிவுகளின்படி தேனி வேலம்மாள் போதி கேம்பஸில் 10-ஆம் வகுப்பு பயின்ற செல்வி ஆர்.அபிராமி 500 க்கு 496 மதிப்பெண் பெற்று தேனி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மருத்துவர் ரகுபதி - மருத்துவர் ஷோபனா ஆகியோரின் மகளான செல்வி அபிராமி தமிழ், கணிதம், ஐடி ஆகிய பாடங்களில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார். அபிராமியின் தந்தையார் திரு. ரகுபதி அவர்கள் தேனி கானாவிலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

அதேபோல், பொள்ளாச்சி விஸ்வ ஷிஸ்யா வித்யாலயா பள்ளியில் பயிலும் குள்ளக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்த டி.ஜனகராஜ் - ஏ.ராதா ஆகியோரின் மகள் ஜெ. அனன்யா, சிபிஎஸ்சி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 487 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதற்கிடையே, நேற்று வெளியான பத்து மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றிபெற்றுள்ள இராஜகம்பளத்து மாணவச் செல்வங்களுக்கு சமுதாயத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

சாதனையாளர்கள் தமிழ்நாடு ABIRAMI thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண