தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
பால்ராஜ் நாயக்கர் இல்லவிழாவில் ஜி.கே.வாசன் நேரில் ஆசீர்வாதம்!

பால்ராஜ் நாயக்கர் இல்லவிழாவில் ஜி.கே.வாசன் நேரில் ஆசீர்வாதம்!

Radheyan 10 Nov 2025 | 01:14 PM
பகிர்:

பால்ராஜ் நாயக்கர் இல்லவிழாவில் ஜி.கே.வாசன் நேரில் ஆசீர்வாதம்!

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளின் திருவள்ளூர் மாவட்டத் தலைவராகவும் பணியாற்றி மறைந்த பால்ராஜ் நாயக்கர் இல்ல விழாவில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் கலந்துகொண்டு அவரது பெயர்த்தி யுக்திகா-வை ஆசீர்வதித்தார். இதன் விவரம் வருமாறு,


தலைநகர் சென்னையில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் முன்னனி தலைவராகவும் , இராஜகம்பள சமுதாயத்தினரின் முகமாக விளங்கியவர் தெய்வத்திரு. பால்ராஜ் நாயக்கர். காங்கிரஸ் பேரியக்கத்தில் பணியாற்றிய பால்ராஜ் நாயக்கர், அக்கட்சியின் பெருந்தலைவர்களான ஜி.கே.மூப்பனார், திண்டிவனம் இராமமூர்த்தி, வாழப்பாடி இராமமூர்த்தி, தங்கபாலு. சுதர்சனம், சோ.பாலகிருஷ்ணன் போன்ற ஆளுமைமிக்க தலைவர்களோடு நெருக்கமாக இருந்தவர். பால்ராஜ் நாயக்கர் மகன் வழிப்பெயர்த்தியும், பெருமாள் கோவில்பட்டி பட்டத்து நாயக்கர் தெய்வத்திரு. ராஜகோபால் அவர்களின் மகள்வழிப்பெயர்த்தியும், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் முன்னோடியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட பொதுச்செயலாளருமான திரு.யுத்தீஸ்வரன் அவர்களின் அன்புமகளுமான ஒய்.யுக்திகா-வின் மஞ்சள் நீராட்டுவிழா நேற்று (09.11.2025) திருநின்றவூர் ஆதிபராசக்தி மஹாலில் நடைபெற்றது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஐயா ஜி,கே.வாசன் அவர்கள் கலந்துகொண்டு செல்வி யுக்திகா ஆசீர்வதித்தார். 

முன்னதாக, ஜி.கே.வாசன் அவர்களை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் மற்றும் யுத்தீஸ்வரன் குடும்பத்தினர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். மேலும் இவ்விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், துணைத்தலைவர் ஆர். பெருமாள், மண்டல ஒருங்கிணைப்பாளர் டி.சுப்பிரமணியன், வேணுகோபால், நெல்லூர் செந்தில்குமார், சென்னகேசவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஆசீர்வதித்தனர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Gkvasan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண