தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்!
விளம்பரங்கள்
கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை!

கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை!

Admin 19 Jul 2026 | 03:27 PM
பகிர்:

தேனி நகரின் முன்னணி உணவகங்களில் ஒன்றாகத் திகழும் கருணா ஈஸ்வர் ரெஸ்ட்டாரண்ட், பிரபல ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஜொமேட்டோ (Zomato) வழங்கும் "Zomato Restaurant Awards 2026 – Best in South Indian, Theni" என்ற உயரிய விருதைப் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலான உணவுத்துறை அனுபவம் கொண்ட தொழில்முனைவோர் திரு. எஸ். செந்தில்குமார் அவர்கள் நடத்தி வரும் இந்த உணவகம், சிறந்த உணவுத் தரம், வாடிக்கையாளர் சேவை மற்றும் தனித்துவமான சுவை ஆகியவற்றின் மூலம் ஏற்கனவே அரிமா சங்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளது.

மாவட்ட உருவாக்க கால அதிகாரியின் மகன்... இன்று வெற்றிகரமான தொழில்முனைவோர்!

ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்திலிருந்து 1992-ஆம் ஆண்டு தேனி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டபோது, தேனி வட்டத்தின் முதல் வட்டாட்சியராகப் பணியாற்றியவர் திரு. சுருளிராஜ். அவருடைய மகனான எஸ். செந்தில்குமார், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உணவகத் துறையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்.

தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இணைந்து, தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் "கருணா ஹோட்டல்ஸ்" என்ற பெயரில் உணவகங்களை நடத்தி வந்த அவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது துணைவியார் திருமதி சுந்தரி அவர்களுடன் இணைந்து, தேனி காவல் நிலையம் அருகே "கருணா ஈஸ்வர் ரெஸ்ட்டாரண்ட்" என்ற புதிய உணவகத்தைத் தொடங்கினார்.

பிரியாணிக்காக தேடிச் செல்லும் வாடிக்கையாளர்கள்!

குறுகிய காலத்திலேயே தேனி நகரில் பிரியாணிக்காக தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள கருணா ஈஸ்வர் ரெஸ்ட்டாரண்ட், தினசரி உணவு சேவையுடன் மட்டுமல்லாமல் திருமணம், கிரகப்பிரவேசம், காதணி விழா, வளைகாப்பு உள்ளிட்ட குடும்ப விழாக்களுக்கும் சிறப்பு ஆர்டர்களின் அடிப்படையில் தரமான உணவு வழங்கி வருகிறது.

மேலும், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரிமா சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் நம்பிக்கைக்குரிய உணவு வழங்குநராகவும் இந்த உணவகம் விளங்கி வருகிறது.

தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டும் ஜொமேட்டோ அங்கீகாரம்!

கருணா ஈஸ்வர் ரெஸ்ட்டாரண்ட் தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு, ஜொமேட்டோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் நேரடி மதிப்பீடுகளின் அடிப்படையில் வழங்கப்படும் "Most Loved Restaurants in Town – Customer Choice" விருதை வழங்கி கவுரவித்தது.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் "Zomato Restaurant Awards 2026 – Best in South Indian, Theni" என்ற விருதுக்கு கருணா ஈஸ்வர் ரெஸ்ட்டாரண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜொமேட்டோ நிறுவனத்தின் டெல்லி தலைமையகத்தின் தேர்வுக் குழுவால் வழங்கப்படும் இந்த அங்கீகாரம், உணவகத்தின் தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்குக் கிடைத்த தேசிய அளவிலான பாராட்டாகக் கருதப்படுகிறது.

வாழ்த்துகள் குவியும் கருணா ஈஸ்வர் ரெஸ்ட்டாரண்ட்!

தனித்துவமான சுவை, தரமான உணவு, நேர்த்தியான சேவை மற்றும் வாடிக்கையாளர்களுடன் உருவாக்கிய நம்பிக்கையின் காரணமாக இந்த விருது கிடைத்திருப்பதாக உணவக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சாதனையை முன்னிட்டு, கருணா ஈஸ்வர் ரெஸ்ட்டாரண்ட் உரிமையாளர்களான திரு. எஸ். செந்தில்குமார் – திருமதி சுந்தரி தம்பதியினருக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ். இராதாகிருஷ்ணன், தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு karuna Eswar Theni thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண